குடியாத்தம் நிருபர் சுவேதா S.கார்த்திகேயன்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம்,
குடியாத்தம் ராஜா கோயில் என்ற இடத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அருவா மீது நின்று கொண்டு சித்தர் முருகன் சாமி அருள்வாக்கு கூறுவது விசேஷம்.இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா கர்நாடகா கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் வருவது வழக்கம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சித்தர் முருகன் சாமி அருுவா மீது நின்று அருள்வாக்கு கூறுவார். ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இந்த பனமரத்துக்குடியில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா 18.01.2023 அன்று காலை 9.00 மணியில் இருந்து 10.30 மணிக்கு உள்ளாக நடைபெற இருப்பதால் பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு கருப்பசாமி அருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இங்கனம்: கோயில் நிர்வாகம்
![]()
![]()
![]()










