உங்களுக்கு போட்டி நீங்களே!

0
855

இரண்டுஆண்டுகளுக்கு முன்னர் தொழில் நிமித்தமாக ஒருவரை பேட்டி எடுக்கச் சென்றிருந்தேன். அவர் குரூப் ஒன் தேர்வில் மாநில அளவில் தேர்ச்சிப் பெற்றவர் என்னுடைய பேட்டியே, மாநிலஅளவில் தேர்ச்சிப் பெற அவர் எத்தனை ஆண்டுகால உழைப்பை செலுத்தினார்? இதற்காக என்னவெல்லாம் தியாகம் செய்தார். குரூப் ஒன் தேர்விலேயே எத்தனாவது தேர்வில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் போன்ற கேள்விகளை தயார் செய்து அவரிடம் பேட்டி எடுத்து, தற்போது போட்டித் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் கட்டுரையாக வெளியிடுவதே என் பேட்டிக்கான உள்நோக்கம். ஆனால், அவரை நேரில் சந்தித்து பேட்டி எடுக்கும் நேரத்தில் என் கேள்விகள் அனைத்தும் மாறிப்போயிருந்தது. ஏனெனில் நான் ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த கேள்விகள் அனைத்திற்கும் நேர்மாறாக இருந்தது அவரின் ஒவ்வொரு பதில்களும்.
அவர் அளித்த பதில்கள் இவைகள்தான்:
குரூப் ஒன் தேர்வில் முதல் முயற்சியிலேயே நான் மாநில அளவில் தேர்ச்சிப் பெற்றுவிட்டேன். என்னிடம் நிறையபேர் கேள்விகேட்டார்கள், எத்தனை ஆண்டுகள் இந்தத் தேர்வுக்கு உங்களை தயார் செய்தீர்கள்? இது உங்களுக்கு எத்தனாவது முறை என்று? திட்டமிட்டு படித்தால் ஆறே மாதத்தில் எளிதாக தேர்ச்சிப் பெற்றுவிட முடியும், மாநில அளவில் தேர்ச்சிப் பெற முடியும் என்பதற்கு நானே சிறந்த உதாரணம் என்றார் அந்த இளைஞர்.
இன்றைக்கு போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அதைப் படிக்கிறேன்; இதைப் படிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, எதையும் முழுவதுமாகவும், உறுப்படியாகவும் படிப்பதில்லை. அங்குதொட்டு, இங்குதொட்டு என்று எல்லாமே அரைகுறையாகத்தான் படிக்கிறார்கள். படிக்கும் ஒரு பகுதியிலாவது முழு அறிவைப் பெற்றிருக்கிறார்களா என்று கேட்டால் அதுவும் ஏமாற்றம்தான். நான் அவர்களை மாதிரி படிக்கவில்லை. முதலில் பாடத்திட்டம் என்ன என்பதை முழுமையாக உள்வாங்கிக்கொண்டேன். பிறகு அந்தப் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட பாடங்களை வரிசைப்படுத்தி, அந்த பாடங்கள் ஒவ்வொன்றாய் சேகரிக்க ஆரம்பித்தேன். சில பாடங்கள் தனியாக நகல் எடுத்துக்கொண்டேன். சில பாடங்கள் படிப்பதற்கு ஒரு முழு தொகுதி புத்தகம் வாங்க வேண்டியிருந்தது. அதையும் வாங்கிக்கொண்டேன். இப்படி பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை தொகுத்து படிப்பதற்கு வசதியாக வகைப்படுத்தி வைப்பதற்காகவே ஒரு மாதம் செலவு செய்தேன். பார்ப்பவர்களுக்கு என் செயல் வேடிக்கையாக இருந்தாலும், எனக்கு அதுதான் சரியென்று பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here