இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்குப் பகுதியானது இரண்டு அதிநவீன டோர்னியர்-228 விமானங்களை இணைத்து அதன் விமானப் படையை பலப்படுத்தியுள்ளது. இந்த விமானங்கள் கான்பூரில் இருந்து இன்று சென்னையை வந்தடைந்தன. இந்த விமானங்கள் பாரம்பரிய நீர் பீச்சு மூலம் வரவேற்கப்பட்டன.
கான்பூரில் உள்ள ஹிந்துஸ்டல் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டின் போக்குவரத்து விமானப் பிரிவில் (TAD) இந்த தொழிநுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டன. தொழிநுட்ப மேம்பாடுகளில் அதிநவீன ஏவியோனிக்ஸ் அமைப்புகள் மற்றும் நவீன சென்சார்களை இணைத்தல் ஆகியன முக்கிய அங்கம் வகிக்கின்றன. விமானங்களின் செயல்பாட்டுத் திறனை கணிசமாக உயர்த்தவும், கடலோரக் கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணி, ஆயுதமேந்திய தடை போன்ற முக்கியப் பணிகளை மிகவும் திறமையான முறையில் செய்யவும் இந்த மாற்றங்கள் உதவும்.
மேம்படுத்தப்பட்ட டோர்னியர்-228 விமானம் வழக்கமான டோர்னியர்-228 போன்ற அதே ஏர்ஃப்ரேமைப் பயன்படுத்துகிறது, ஆனால் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன், புதிய ஐந்து-பிளேடு ப்ரொப்பல்லர், கண்ணாடி காக்பிட், 12.7 எம்எம் ஏவி துப்பாக்கி, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்புகள் போன்றவை புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசின் மேக்-இன்-இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, இந்திய கடலோர காவல்படையின் ஆத்மநிர்பர் பாரத் குறி்க்கோளுக்கு சான்றாக அமைகிறது இந்த செயல்பாடு. சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் விமான நிலையம் ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர பகுதிகளில் தடையற்ற வான்வெளி கண்காணிப்புக்காக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைக் கொண்டியங்குகின்றது.














