கழிவு நீரில் மிதக்கும் திருச்செந்தூர் கண்டு கொள்ளுமா புதிய அரசு?

0
12

முருகனின் ஆறு படை வீட்டில் இரண்டாம் வீடு திருச்செந்தூர் தமிழகத்தின் மிக முக்கியமான ஆலயங்களில் மிகவும் முக்கியமாக திருத்தலம் தினமும் பல்லாயிரம் பக்தர்கள் வந்து செல்லும் திருச்செந்தூரில் நிலைமை இன்று கழிவுநீரில் மிதக்கிறது ஆறாக ஓடுவதால் துர்நாற்றம் திருக்கோவிலை சுற்றி வீசுகிறது இதனால் சுகாதார சீர்கேடு இங்கு வசிக்கும் மக்களுக்கும் வரும் பக்தர்களுக்கும் மலேரியா டெங்கு காய்ச்சல் வந்துவிடுமோ என்று இங்கு வசிக்கும் பொதுமக்கள் பீதியாக உள்ளனர் திமுகவும் அதிமுகவும் கேடுகெட்ட நகராட்சி நிர்வாகமும் அறநிலையத்துறையும் காரணம்அதேபோல் முதியவர்கள் பெண்கள் குழந்தைகள் என திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் அதாவது வடக்கு ரத வீதி தெற்கு ரதவீதி தெப்பலாக்குல தெரு டி பி ரோடு காமராஜர் சாலை சன்னதி தெரு இவைகளில் தினசரி கழிவுநீர் ஆறு போல் ஓடுகிறது இது சம்பந்தமாக நகராட்சி தலைவர் செங்குழி ரமேஷ் அவர்களிடம் பலமுறை புகார் கொடுத்தும் சீர் செய்யப்படாத அவல நிலை இருக்கிறது இப்போது திருச்செந்தூர் எம்எல்ஏ திரு. அனிதா ராதாகிருஷ்ணன் சென்ற ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போதும் இவற்றை சீர் செய்யாமல் இந்த பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த முடியாமல் நாற்றம் எடுக்கிறது: திருச்செந்தூர் சமூக ஆர்வலர் திரு. பிரதிக்ஷா ராஜ் அவர்கள் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்து கடந்த ஏழு ஆண்டுகளாக பல போராட்டங்கள் பல ஆர்ப்பாட்டங்கள் செய்தும் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை ஆட்சியாளர்களின் கவன இருப்புக்காக கழிவு நீர் ஓடும் இடங்களில் எல்லாம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியும் பல மனுக்கள் நகராட்சி ஆணையர் காவல் துறை அலுவலகம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சுப்பிரமணி சாமி திருக்கோயில் இணையானையர் மாவட்ட ஆட்சியாளர் சென்ற ஆட்சி அமைச்சர் திரு அனிதா
R. ராதாகிருஷ்ணன் போன்றவர்களிடம் பலமுறை புகார் கொடுத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிவிட்டது.
அதேபோல் பக்தர்களும் செல்லும் வழியில் குடிமகன்களால் ஆக்கிரமிப்பு திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரியாக ஆயிரம் கணக்கான பக்தர்கள் தினமும் நடந்து வருகிறார்கள் அவர்கள் திருச்செந்தூர் திருநெல்வேலி சாலையில் கோவிந்தம்மாள் மகளிர் கல்லூரி பிரதான சாலையில் Blue stars welfare club என்ற பிரம்மாண்டமான பார் உள்ளது ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் மது அருந்தும் வசதி உள்ளது அருகிலேயே டாஸ்மாக் உள்ளதால் குடிமகன்கள் கூட்டம் நடுரோட்டில் அதிகமாகி ஆங்காங்கே அரைகுறை ஆடை உடனோ ஆடை இல்லாமலோ மட்டே ஆகி நடுரோட்டில் உருளும் காட்சி பக்தர்களை அலறி ஓட வைக்கிறது பலமுறை ஆட்சியாளர்களிடம் இது சம்பந்தமாக புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இந்த த.வெ.க ஆட்சிக்கு வந்த பிறகு குடிமக்களுக்கு உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டு விற்பனை படு ஜோராக இருக்கிறது மெயின் ரோட்டில் தான் இந்த பார் இருக்க வேண்டுமா? இந்த பாருக்கு கொஞ்சம் தள்ளி சுடுகாடு உள்ளது அங்கே டாஸ்மார்க் கடைகளையும் இந்த பாரும் வைக்கலாமே. ஆனாலும் திருச்செந்தூருக்கு வரமாட்டேன் பொன்னானாலும் திருச்செந்தூரில் பொன்னாவேன் என்ற பாடிய TMS இன்று இருந்திருந்தால் மேலே குறிப்பிட்ட வரிகளில் தான் பாடியிருப்பார் திருச்செந்தூருக்கு யார் வந்தாலும் மூக்கை பிடித்துக் கொண்டு மாஸ்க் போட்டுக் கொண்டு தான் வர வேண்டும் அந்த அளவிற்கு கழிவுநீர் துர்நாற்றம் வீசுகிறது. பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த பல முறை நகராட்சி ஆணையரிடம் புகார் கொடுத்தும் 25 வருடங்களாக இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் இழுத்தடித்து திருச்செந்தூரை நாரடித்துள்ளனர் திருச்செந்தூர் கோவிலில் திருமணம் செய்ய தடை திருச்செந்தூரில் உள்ளே சண்முகர் மஹாலில் கொடிமரம் முன்பும் இதுவரை பக்தர்கள் திருமணம் நடைமுறை காலகாலமாக உள்ள நிலையில் கோவிலில் ஆணையர் சுமார் ஆறு மாத காலமாக இதை தடுத்து பக்தர்களை விரட்டி அடித்து கோவிலுக்கு வெளியே சூரியன் முன்பு போய் தாலியை கட்டு என்று உத்தரவு போட்டுள்ளனர்
பக்தர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியும் மனவிருப்பியும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது
திருக்கோவிலினின் முருகனை தரிசிக்க பல மணி நேரம் குறைந்தது 5 மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்படுகிறது இதனால் வயதானவர்கள் குழந்தைகள் பெண்கள் இதய நோயாளிகள் நீரழிவு நோயால் அவதிப்படுபவர்கள் காத்திருக்கும் நேரத்தில் திடீரென்று சிறுநீர் வந்தால் கழிக்க டாய்லெட் வழியில் எதுவும் இல்லை இதனால் சில பக்தர்கள் முருகனை தரிசிக்க முடியாமல் வெளியில் வந்து விடுகிறார்கள் அது மட்டுமல்ல மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர் அதேபோல் திருச்செந்தூரில் மழைநீர் வடிகால் நகாய் என்ற தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமானது இந்த மழை நீர் வடிகாலுக்குள் தங்கும் விடுதியில் உள்ள மனிதக் கழிவுகளை கலந்து விடுகின்றனர் இதனால் வடிகால் பொங்கி இந்த கழிவுநீர் எல்லாம் பிரதான சாலையில் ஆறாக ஓடுகிறது இந்த கடலுக்குள் இறுதியாக சென்றடைகிறது புனிதமான கடல் நீர் கழிவு நீர் மற்றும் மனித கழிவுகளால் அசுத்தம் அடைகிறது நடவடிக்கை எடுக்குமா புதிய அரசு கண்டிப்பாக எடுக்கும் என்று நம்புகிறோம் இந்த மனித கழிவுகளை மழை நீர் வடிகாலில் கலப்பதை உடனடியாக தடை செய்ய வேண்டும் இந்த கழுவிகளை பாதாள சாக்கடையில் திறந்து விட வேண்டும் இதுவே இந்த மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது திருச்செந்தூர் முருகன் தான் இந்த அவல நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று அந்த பகுதி சமூக ஆர்வலரும் பொது மக்கள் மனக்குமுறலும் கூட.(முதன்மை நிருபர் A.R.P.T முத்துக்குமார் தூத்துக்குடி மாவட்டம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here