சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுமக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள்;

0
114

சென்னை. பொதுமக்கள் தாங்கள் புதியதாக வாங்கும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு சிறப்பு எண் ஆணை பெற வேண்டும் என்றால் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். அதன் பிறகு அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்து அவர்கள் கேட்கும் சிறப்பு எண் ஆணையை பெற்று அதன் பிறகு சம்பந்தப்பட்ட வட்டார அலுவலகத்தில் (RTO) சிறப்பு எண் வரிசைக்கேற்றார் போல் ரு. 40.000/- முதல் 2 லட்சம் வரை பணம் செலுத்தி தங்களுடைய வாகனங்களுக்கு சிறப்பு எண்களை வாங்கிக் கொள்கிறார்கள். அதிமுக ஆட்சியிலும் கடந்த திமுக ஆட்சியிலும் இந்த சிறப்பு எண் ஆணையை பெறுவதற்கு இடைத்தரகர்கள் மூலமாக நம்பருக்கு ரூ. 10.000/-முதல் ரூ. 15000/-வரை கையூட்டு செலுத்தி இரண்டு அல்லது மூன்று நாட்களில் சிறப்பு எண் ஆணையை பெற்று வந்தார்கள். தற்பொழுது தவேக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து பொதுமக்கள் தாங்கள் புதியதாக வாங்கும் வாகனங்களுக்கு சிறப்பு என் ஆணையை இடைத்தரவர்களை அணுகாமல் வாகன உரிமையாளர்கள் நேரடியாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகத்தில் வந்து ரூ. 50 மதிப்புள்ள போஸ்டல் ஸ்டாம்ப் மற்றும் தபால் கவருடன் இணைத்து சிறப்பு என் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை பொது மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தது அதன்படி பொதுமக்களும் இடைத்தரகர்களை அணுகாமல் சிறப்பு எண் ஆணையை பெற சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் தங்களுடைய சிறப்பு எண் ஆணையை பெற விண்ணப்பங்களை அளித்து வருகிறார்கள். ஆனால், போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் சிறப்பு எண் விண்ணப்பங்களை பெற வரும் பொது மக்களிடம் ஏளனமாகவும், முகச்சுழிப்புடனும் அவர்களிடத்தில் நடந்து கொள்கிறார்கள். மேலும் சிறப்பு எண் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு ஒரு வாரத்தில் தங்களுக்கு தபால் மூலமாக வீட்டிற்கு வந்து விடும் என்று சொல்லிவிட்டு அவர்களை அனுப்பி வைக்கிறார்கள். சிறப்பு எண் ஆணை தாமதமானால் அலுவலகத்தின் கதவில் ஒட்டி இருக்கும் தொலைபேசி எண்ணை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள் இந்த தொலைபேசி மூலமாக உங்களுடைய விண்ணப்ப விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று சிறப்பு எண் ஆணையை பெற வரும் பொதுமக்களிடம் சொல்லி அனுப்பி விடுகிறார்கள் அதன்பிறகு ஒரு வாரம் காலத்திற்கும் மேலாக சிறப்பு எண் ஆணை கிடைக்கப்பெறாமல் இருக்கும் பொதுமக்கள் குறிப்பிட்ட அந்த தொலைபேசி எண்ணிற்கு அழைக்கும் போது அந்த தொலைபேசி எந்நேரமும் உபயோகத்தில் இருப்பதாக பதில் வருகிறது. அருகாமையில் இருக்கும் வாகன உரிமையாளர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து ஊழியர்களிடம் இதைப் பற்றி கேட்டால் அதற்கு சர்வர் வேலை செய்யவில்லை நாங்கள் என்ன செய்வது மேலும் 3 அல்லது 4 நாட்கள் ஆகும் என்று சர்வ சாதரணமாக சொல்லி பொதுமக்களை அனுப்பி வைக்கிறார்கள் . சரி என்னதான் நடக்கிறது என்று நாமும் குறிப்பிட்ட போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகத்தில் சென்று பார்த்தபோது எந்த தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று பொதுமக்களை அனுப்பி வைக்கிறார்களோ அந்த தொலைபேசி எண் கொண்ட தொலைபேசி ரிசிவரை சரியாக வைக்காமல் தொலைபேசியில் மேல் வைத்து இருப்பதை கண்டு நாம் அதிர்ந்தோம் பொதுமக்கள் தங்களுடைய பயன்பாட்டிற்காக பல லட்சங்களை செலவு செய்து வாகனங்களை வாங்கிவிட்டு இப்படி சிறப்பு எண் ஆணை கிடைக்காமல் அல்லல்படும் நிலை உருவாகியுள்ளது. அந்த அலுவலகத்தின் வெளியே நின்று கொண்டிருந்த நபரை அழைத்து எதற்காக இங்கே வந்து உள்ளீர்கள் என்று கேட்டபோது நம்மிடம் அவர் ஏற்கனவே சிறப்பு எண் ஆணை விண்ணப்பத்தை அளித்து வெகு நாட்களாகிறது என்றும் நேரடியாக வந்து கேட்டால் இப்படி அலட்சியமாக பதில் சொல்கிறார்கள் என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. பணம் செலவானாலும் பரவாயில்லை இதற்கு இடைத்தரகர்கள் மூலமாகவே சிறப்பு என் ஆணையை பெற்றிருப்போம் என்று புலம்பி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். ஊழல் இல்லாத தவே க அரசு இதை கவனிக்குமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here