



திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதயம் மக்கள் சேவை மையம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட ப்பட்டது பெண்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக விளையாட்டுப் போட்டிகள் பேச்சுப் போட்டிகள் கவிதை போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பரிசு வழங்கி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரமங்கை வேலுநாச்சியார் உள்ளிட்ட பெண்களைக் குறித்தும் சாதனையாளர்களாக இருக்கும் பெண்கள் குறித்தும் அவர்களது முன்னேற்றம் குறித்தும் அறிவுரைகளை வழங்கிய தியாகியின் மகள் மற்றும் கல்லூரி முதல்வர்
திருவொற்றியூர் அரசு அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழாவை கடந்த இரண்டு நாட்களாக கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது இந்த மகளிர் தின விழாவில் பெண்கள் தாங்கள் முன்னேற்ற அடையும் வகையில் அவர்களை திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட கவிதை மற்றும் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுவது மியூசிக்கல் சேர் மற்றும் கோலப்போட்டி கவிதை மற்றும் யோகா உள்ளிட்ட போட்டிகள் நடத்தி கல்லூரி மாணவிகளின் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் இதில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் வந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அரசு கல்லூரி மாணவிகள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் விதமாக அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தினர் அதைத்தொடர்ந்து சர்வதேச மகளிர் தினத்தையும் கொண்டாடி மகிழ்ந்தனர்
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சுதந்திரப் போராட்ட தியாகியின் மகள் லட்சுமி ராஜாராம் தலைமையில்
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஐ. பவுசியா அரசு கல்லூரி முதல்வர் விஜயா மற்றும் முனிரத்தினம் கிருஷ்ணன் உள்ளிட்டோர் மாணவிகளுக்கு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ் கேடயம் பதக்கம் உள்ளிட்ட பரிசு வழங்கி மகளிர் தின விழா மிக விமர்சையாக கொண்டாடினார்












