பாட்டாளி மக்கள் கட்சி திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம்.

0
153

மார்ச் 22 உலக தண்ணீர் நாள் தினத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க கோரியும் ஆக்கிரமிப்பில் உள்ள ஏரி குளங்களை மீட்க கோரியும் பசுமைத் தாயகம் சார்பில் பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி தலைமையில் நீர்நிலைகள் பாதுகாப்பு பற்றியும் பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது.

வடக்கு மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி தொகுதியில் உள்ள ஒன்றிய செயலாளர்கள் அவரவர்கள் பகுதியில் உள்ள ஏரி குளங்களை கணக்கெடுத்து எத்தனை ஏரி குளங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது எத்தனை ஏரி குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளது என்று கணக்கெடுத்து வருகின்ற கிராம சபை கூட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள ஏரி குளங்களை மீட்க கோரியும் தூர் வாரப்படாத ஏரி குளங்களை தூர்வாரக் கோரியும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மே 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் சித்திரை முழு நிலவு வன்னியர் பெருவிழா மாநாட்டில் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பாக லட்சக்கணக்கான பேர் குடும்பம் குடும்பமாக ஒன்று கூட வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.

இந்த மாநாட்டிற்கு தேவையான சுவர் விளம்பரங்கள் பதாகைகள் போஸ்டர்கள் என்று அதிக அளவில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் ஒவ்வொரு ஒன்றிய செயலாளர்களும் இதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த மாநாட்டில் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் வி எம் பிரகாஷ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். வடக்கு ஒன்றிய செயலாளர் மு. சந்தானம் வரவேற்புரை வழங்கினார்.

நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பசுமைத்தாயகம் அமைப்பினர், பாமக மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மகளிர் அணி பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி
வடக்கு மாவட்டம்
பொன்னேரி தொகுதி
இடம்: சனப்பன்சத்திரம் கூட்டு சாலை
யுவஸ்ரீ மஹால்
நேரம் 12மணி
செய்தி: C முருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here