வெளிநாட்டிற்கு வேலை பார்ப்பதற்காக சென்று சிக்கி தவிக்கும் பெண்களை மீட்டு தரக்கோரி குடும்பத்தினர் கண்ணீர் மல்க புகார்!

0
330

சென்னை புதுவண்ணாரப்பேட்ட அருணாச்சல ஈஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணி(32), வடிவுக்கரசி(38), வள்ளி(35). ஆகிய 3 பேரும் அப்பகுதியில் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர்

இந்த மூன்று பேரும் தனது கணவரை பிரிந்து அவரவரது தாயுடனும் தங்களது குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்
கணவரை பிரிந்து வாழும் மூன்று பெண்களும் தனது குழந்தை மற்றும் தாயுடன் சேர்ந்து வறுமையில் சிக்கித் தவிப்பதால் வெளிநாட்டிற்குச் சென்று வேலை பார்த்தால் பணம் அதிகமாக சம்பாதிக்க முடியும் என்ற நோக்கத்தோடு அருகருகே வசிக்கும் மூன்று பெண்களும் கள்ளக்குறிச்சியில் இருக்கும் டிராவல் ஏஜென்சி மூலமாக வெளிநாட்டிற்குச் சென்று வேலை பார்ப்பதாக முடிவெடுத்தனர்
இதனைத் தொடர்ந்து தனியார் டிராவல்ஸ் ஏஜென்சியின் வழிகாட்டுதலின்படி கடந்த பிப்ரவரி மாதம் பாஸ்போர்ட் விசா ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கொரோனா பரிசோதனைகள் அனைத்தையும் முடித்து பக்ரைன் நாட்டிற்கு மூன்று பெண்களும் வீட்டு வேலை செய்வதற்காக சென்றுள்ளனர்
இந்நிலையில் வேலைக்கு சென்று நான்கு மாதங்கள் ஆன நிலையில் வேலைக்கு சென்ற இடத்தில் வீட்டு உரிமையாளர்கள் அடித்து துன்புறுத்துவதாகவும் உணவு அளிக்காமல் சித்ரவதை செய்வதாகவும் சென்னையில் உள்ள தங்களது வீட்டிற்கு வாட்ஸ் அப் மூலமாக தகவல் தெரிவித்துள்ளனர் மேலும் இதனை தொடர்ந்து பக்ரைன் நாட்டில் உள்ள ஏஜென்சியிடம் கேட்டதற்கு 2 லட்சம் பணம் தந்தால் திருப்பி அனுப்புவதாக கூறி விட்ட நிலையில் சென்னையில் வசிக்கும் தங்கள் குடும்பத்தினரிடம் போனில் கண்ணீர் மல்க மூன்று பெண்களும் தெரிவித்துள்ளனர்
இதனைத் தொடர்ந்து மூன்று பெண்களின் குடும்பத்தினரும் பக்ரைனில் சிக்கி தவிக்கும் மூன்று பேரையும் மீட்டு தரும்படி சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் பெண்களை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here