ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினரும். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான வசந்த குமார் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தியை மிகுந்த வேதனை அளிக்கிறது.
எச் .வசந்த குமார் அவர்கள் 1970களில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையாளராக தனது வாழ்க்கையை துவங்கியவர். கடுமையான உழைப்பால் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும் என வாழ்ந்து காட்டியவர்.
மேலும் ஏழை மாணவர்களுக்கு இலவச டியூசன் மையங்களை அமைத்து கொடுத்துள்ளார். மேலும் தெரு வோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் பயன் பெறும் வகையில் வட்டியில்லாக் கடன் வழங்கும் திட்டத்தையும் துவங்கினார் .மேலும் நாகர்கோவில் 2019ல் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற வசந்த குமார் அவர்கள் சிறந்த நாடாளு மன்ற உறுப்பினராக விளங்கினார் .
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் கட்சியின் அன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்















