வண்ணாரப்பேட்டையில் நோ broker.com என்ற இணையதளத்தில் வீட்டின் புகை படத்தை பதிவிட்டு வீட்டை லீசுக்கு விடுவதாக கூறி கணவன்-மனைவி இருவரும் பல லட்சம் மோசடி ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர் அப்துல்காதர் பேன்சி ஸ்டோர் நடத்திவரும் இவர் லீசுக்கு வீடு தேடிவந்துள்ளார் அப்போது புரோக்கர் கமிஷன் இல்லாமல் நோ புரோக்கர் . காம் என்ற இணையதளத்தில் தேடிவந்த இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ரவி அமுதா பதிவிட்டு இருந்த வீட்டை பார்த்து 15 லட்சம் ரூபாய்க்கு பேசி முடித்துள்ளார்
பின்னர் முதல் தவணை 8 லட்சம் இரண்டாவ்து தவணை 7 லட்சம் என காசோலையாக அளித்துள்ளார் பணத்தை பெற்று கொண்ட ரவி அப்துல் காதர் பெயருக்கு பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்
பின்னர் ஒருமாதம் ஆகியும் வீட்டை தரவில்லை வேறு காரணங்கள் கூறி தர மறுத்துள்ளனர் இதுகுறித்து அப்துல் காதர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் விசாரணையில்
இவர்கள் ஒரே வீட்டை பலபேருக்கு லீசுக்கு தருவதாக பல லட்சம் ரூபாய் வாங்கி மோசடியில் ஈடுபட்டது அம்பலத்துக்கு வந்தது
வீட்டை போட்டோ எடுத்து நோ broker.com என்ற இணையதளத்தின் மூலம் பதிவிட்டு குறைந்த விலைக்கு ஏஜன்ட் கமிஷன் கொடுக்காமல் வீடு கிடைக்கின்றதே என்ற ஆசையில் வீடு தேடிக் கொண்டிருப்பவர்கள் கண்டு பிடித்து ஏமாற்றியுள்ளனர்
ஒரே வீட்டை பலபேருக்கு காட்டி 15 லட்சம் ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய் என ஒவ்வொரு வருடமும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு அக்ரிமெண்ட் போட்ட பின்பு ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி வீட்டை தராமல் இருப்பதாகவும் ஆனால் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால் அதனைக் கொடுக்காமல் சாக்கு போக்கு சொல்லி மிரட்டி வந்துள்ளனர்
8 மாதமாக அலைக்கழிக்கப்பட்ட வந்த அப்துல் காதர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் விசாரணை ஈடுபட்ட போலீசார் ஏற்கனவே இதே போன்று 3 புகார்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
உடனடியாக துரித நடவடிக்கையில் ஈடுபட்டு டி நகர் பகுதியில் தலைமறைவாக இருக்கும் ரவி தம்பதியினரை போலீசார் மடக்கி பிடித்தனர்
பின்னர் அவர்களின் விசாரணையில் பணம் வாங்கியது உண்மை என நிரூபணம் ஆனதை அடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்
ஒரே வீட்டை புகைப்படம் எடுத்து 10 லட்சம் 15 லட்சம் 20 லட்சம் என ஒவ்வொருவருக்கும் மாறி மாறி பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது நோ broker.com இணையதளத்தில் புரோக்கர் கமிஷன் கொடுக்காமல் வீடு கிடைக்கும் என நம்பியவர்களுக்கு ஏமாற்ற பட்டதுதான் மிச்சம்















