பொது மக்கள் கோரிக்கை;

0
44

வடசென்னை, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 04 – ஆர்.கே.நகர்
தொகுதிக்கு உட்பட்ட 42 – வது வட்டம் குடிசைமாற்று வாரியம் கட்டிடம் அருகில்
பழமையான காளி கோவில் அமைந்துள்ளது. குடிசைமாற்று வாரிய கட்டிடங்கள்
அமைவதற்கு முன்பே இக்கோவில் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதிவாழ் மக்கள் இங்கு இறைவழிபாடு தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திடிரென மாநகராட்சி தரப்பில் காம்பவுண்டுவால் அமைக்கப்படுவதற்
காக இக்கோவிலை இடிக்கப்போவதாக வந்த தகவலை கேட்டு கோவில் நிர்வாகிகள்,
பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சி, எந்தவித
இடையூறும் இல்லாமல் அமைந்துள்ள மக்கள் வழிபாட்டில் உள்ள இந்த காளி
கோவிலை இடிக்கின்ற எண்ணத்தை அடியோடு கைவிட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here