சென்னை கொளத்தூர் பகுதியில் அட்வகேட்டர் லா அசோசியேட்ஸ்” (Advacator Law Associates)

0
228

சென்னை கொளத்தூர்:

சென்னை கொளத்தூர் பகுதியில்
“அட்வகேட்டர் லா அசோசியேட்ஸ்” (Advacator Law Associates) என்ற அமைப்பு மூலமாக

பண வசதி இல்லாத ஏழை எளிய மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் போராட தயாராக உள்ள வழக்கறிஞர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், நீதிக்காக போராடும் வழக்கறிஞர்களின் குரல்வளை நெறிக்கப்படுவதை தட்டிக்கேட்பதற்கான அமைப்பாகவும் வழக்கறிஞர் சங்கம் ஒன்றினை தொடங்கினார்கள்

இந்த நிகழ்வில் வழக்கறிஞரான தனசேகர் விவேக் விஷ்ணு சிவகுமார் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் குழுவானது பல்வேறு கேள்விகளுக்கு செய்தியாளர்கள் முன்னிலையில் விளக்கம் அளித்தனர்

அதில் பின்வருமாறு ..

பணவசதி இல்லாத ஏழை மக்களுக்காக வழக்கை நடத்தி கொடுப்பது, சட்ட ரீதியிலான உதவிகளை வழங்குவது போன்ற பணிகளைச் செய்து வருகின்றனர்

ஆரம்பகட்டத்தில் 3 வழக்கறிஞர்களை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்ட இந்த அமைப்பானது, தற்போது 40 வழக்கறிஞர்களைக் கொண்ட மாபெரும் அமைப்பாக உருவெடுத்துள்ளது.

தற்போது அட்வகேட்டர்
லா அசோசியேட்ஸ் எனப்படும் இந்த அமைப்பானது 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களைக் கொண்டு ஏழை மக்களுக்கு வழக்குகளை நடத்தவும், வழக்குகளை தொடுக்கவும் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

இலவச சட்ட உதவி என்பது வெறும் பெயரளவிலானதாக இல்லாமல், சட்டத்தின் முன் தன்னை பிரதிநிதித்துவப்படுத்த வலிமையோ, பண பலமோ இல்லாத சாமானிய மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தர போராடி வருகிறது. விரைவில் இது அதிவேகமாக வளர்ந்து நாடு முழுவதும் சேவை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here