திருவொற்றியூர் தியாகராஜபெருமான் திருக்கல்யாணம் கோலாக்கலமாக நடைபெற்றது.
திருக்கோவிலை சுற்றி உள்ள தெருக்களெல்லாம்
திருவிழாக்கோலம் பூண்டிருந்தன.
சாலைகள் தோறும் பக்தர்கள் கால்கள்…., திருக்கோயிலை நோக்கியே பயணித்தன.
அயோத்தி
சாலைகளில் எங்கும் சோறு வடித்த தண்ணீர் வழிந்து ஓடியது என்பான் கவிச்சக்கரவர்த்திகம்பன்.
தேரடி சுற்றிலும் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு, குளிர்பானம், மோர்
எங்கு பார்த்தாலும் விநியோகம். அதன் தடபுடல் அடையாளங்கள் எங்கும் தென்பட்டன.
கொடுப்பவர் இடத்திலும் அதை கையில் கொள்பவர் இடத்திலும் எவ்வளவு ஆனந்தம்.
சிலர் தானம் தருகிறபோது தன்னிடத்தில் இல்லை என்றாலும் பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டு வாங்கி தருவார்கள்.
இவர்தானம் தர பக்கத்து பாக்கெட் காலியா? என்று தோன்றலாம்.
அதில் தானத்திற்கே உரிய பெரும் சிறப்பு உள்ளது. தானம் பெறுபவர் கிடைக்கும் போதே நாம் கொடுத்திட வேண்டும். அந்த வாய்ப்பு பிறகு கிடைக்கலாம்; கிடைக்காமல் போகலாம் அல்லவா?
பக்கத்தில் உள்ளவரிடம் எப்போது வேண்டுமானாலும் திரும்பத் தந்து விடலாம்.
கொடுப்பவர் மனம் அத்தகையது!
எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்த கர்ணன், தானம் கேட்க வந்தவருக்கு தங்க எண்ணைய் கிண்ணத்தை தந்த காட்சி நம் நினைவுக்கு வருகிறதா?
இவ்வாண்டு தேரடி எல்லப்பச் செட்டியார் திருமண மண்டபத்தில் சமபந்தி உணவு வழங்கவும்,
மண்டப முகப்பில் பலநூறு மக்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, குருமா, தண்ணீர் பாட்டில் நமது
கே.பி.சங்கர்MLA அவர்களுடன் இணைந்து வழங்கி மகிழ்ச்சி அடைந்தோம்.
தேரடியிலும்,மாட வீதிகளிலும், திருவொற்றியூர் நெடுஞ்சாலையிலும், எங்கு பார்த்தாலும் அன்னதானங்களிலும் சிறப்பாக வழங்கப்பட்டதுவழங்கும் உள்ளங்கள் வளமார்ந்து வாழ்க!வாழ்க!- பி.எஸ்.சைலஸ் Ex.mc
மாவட்டப் பிரதிநிதி















