*மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு*
வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் தொடர்ந்து புயல்கள் உருவாகிவருகின்றன தற்பொழுது நிரெவி புயல் புயலின் தாக்கத்தினால் நேற்று முதலே சென்னையில் மழை பெய்து வருகிறது
இன்று அதிகாலை முதலே பெய்து வரும் தொடர் கன மழையினால் தண்டையார்பேட்டை புதுவண்ணாரப்பேட்டை வண்ணாரப்பேட்டை பகுதிகளில் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கிறது
இந்நிலையில் தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெரு பகுதியில் ஏற்கனவே சாக்கடை நீர் குளம் போல் தேங்கி நின்ற நிலையில் மழை நீரும் சேர்ந்து தேங்கியதால் இன்று காலை அவ்வழியாக காலணி இல்லாமல் நடந்து சென்ற மீனவர் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டார்
விசாரணையில் காசிமேடு நாகூரார் தோட்டம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற 35 வயது என்பது தெரியவந்துள்ளது
காலணி இல்லாமல் தண்ணீரில் நடந்து சென்றபோது மின்சாரம் தாக்கியது தெரியவந்துள்ளது
சேனி அம்மன் அம்மன் கோயில் பகுதியில் மின்சார பெட்டியிலிருந்து வெளியில் வரும் உயர் மின்னழுத்த கேபிளில் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தண்ணீரில் பாய்ந்து உள்ளது
சாலை முழுவதுமே தண்ணீர் தேங்கியதால் சாலையின் ஓரமாக நடந்து சென்ற சுரேஷ் மின்சாரம் தாக்கி துடிதுடித்து உள்ளார்
அருகிலிருந்தவர்கள் காப்பாற்ற சென்ற போது அவர்களுக்கும் லேசாக மின்சாரம் தாக்கியது
இதனையடுத்து அருகிலிருந்த கட்டையை எடுத்து சுரேஷசை காப்பாற்ற முயன்றனர்
ஆனால் அதற்குள் சுரேஷ் மயக்கமடைந்தார் இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பரிசோதித்தபோது சுரேஷ் உயிரிழந்திருப்பது தெரியவந்தது
இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தண்டையார்பேட்டை போலீசார் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்















