உத்திர பிரதேசத்தில் பெண்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை கைது செய்யக்கோரி திராவிட புரட்சிமக்கள்கட்சி மற்றும் திராவிடர் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம்;

0
311

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திராவிட புரட்சிமக்கள்கட்சி மற்றும் திராவிடர் கழகம் சார்பில் திராவிட புரட்சி மக்கள் கட்சியின் அலுவலகத்தில் உத்திரபிரதேசத்தில் மனிஷா என்கிற 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யக்கோரி பதாகைகள் ஏந்தியும், முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகம் பொது குழு உறுப்பினர் வழக்கறிஞர் சக்திவேல் தலைமை தாங்கினார். திராவிட புரட்சி மக்கள் கட்சி மாநிலதலைமை அரசியல் ஆலோசகர் நேசமணி, மாநில துணைப்பொது செயலாளர் பொல்லான், ஒன்றிய செயலாளர் சண்முகம், நகர செயலாளர் சதிஷ் மற்றும் திராவிடர் கழகம் இளைஞரணி தலைவர் ஆ.முனிஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here