சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருமண மண்டபத்தை குப்பை தரம் பிரிக்கும் கூடமாக மாற்றுவதற்கு ;மக்கள் எதிர்ப்பு

0
342

எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருமண மண்டபத்தை குப்பை தரம் பிரிக்கும் கூடமாக மாற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சென்னை எண்ணூரில் மார்க்கெட் பள்ளிக்கூடம் நடுவே அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருமண மண்டபத்தை பல வருடங்களாக அப்பகுதி மக்கள் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக பயன்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் திருமண மண்டபம் சிதிலமடைந்த காரணத்தால் பில்டிங்கை இடித்துவிட்டு மீண்டும் புதிதாக திருமண மண்டபத்திற்காக கட்டிடம் கட்டப்படுவதாக சென்ற ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஆனால் தற்பொழுது அந்த திருமண மண்டபத்தில் குப்பைகளை தரம் பிரித்தல் மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் கூடமாக மாற்றி அமைத்ததால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் எண்ணூர் அனைத்து கிராம பொது நல சங்கத்தின் சார்பாக கோஷங்களை எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்பகுதியில் ஏற்கனவே ஆலைகள் நிறைந்துள்ளதால் மாசு காற்று போன்றவற்றால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வரும் நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக நிறைந்த மையப்பகுதியில் இது போன்ற குப்பை தரம் பிரிக்கும் நிலையம் உருவாக்கப்பட்டால் அப்பகுதியில் ஏராளமான தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இதனை அரசு கருத்தில் கொண்டு குப்பை பிரிக்கும் கூடத்தை நீக்கி சிதிலமடைந்த கட்டிடத்தை புதுப்பித்து மீண்டும் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here