ரேஷன் கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை தேவை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் திருவேங்கடபுரத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் உப்பாரபாளையம் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. துவக்கப்பள்ளி மற்றும் உட்கார பாளையம் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வரும் அதே கட்டிடத்தின் பக்கத்தில் ரேஷன் கடையும் செயல்பட்டு வருகிறது இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று மட்டும் இந்த பிரச்சனை அல்ல இது ரேஷன் கடை பொருட்கள் எப்போதெல்லாம் விநியோகம் செய்யப்படுகின்றதோ அப்போதெல்லாம் இதே பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர முடியாமல் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் கூச்சலும் குழப்பமாக உள்ளதால் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இப்பள்ளியில் செயல்படும் ரேஷன் கடையை அகற்றி மாற்று இடத்தில் அமைத்து தருமாறு ஆசிரியர்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவே இந்த ரேஷன் கடையை வேறொரு இடத்திற்கு மாற்றம் செய்ய அரசு முன் வர வேண்டும் என்று ஆசிரியர்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை.
(உள்ளாட்சி டுடே செய்திகளுக்காக நிருபர் சி முருகன்)


ரேஷன் கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை தேவை













