தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது:

0
388

தண்டையார்பேட்டை திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து கொள்ளை போனதாக காவல்நிலையங்களில் புகார் வந்த நிலையில்

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவ பிரசாத் . உத்தரவின் பேரில் தண்டையார்பேட்டை உதவி ஆணையர்

.இருதயம் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவந்த நிலையில் தண்டையார்பேட்டை போலீசார் இன்று காலை9.0 மணிக்கு வாகன தணிக்கையில் தனிப்படையுடன் ஈடுபட்டிருந்தனர்

அப்பொழுது சந்தேகத்தின் பேரில் இருவரை போலீசார் மடக்கி சோதனை செய்தபோது இருவரும் முன்னுக்கு முரணாக பேசியதால் போலீசார் அவர்களை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்ததில்
அவர்கள் மணிகண்டன் (32) என்கின்ற பாட்டில் மணி

மற்றொருவர் மணிகண்டன் (28)எ குண்டு மணி என்பதும் தெரியவந்தது

தண்டையார்பேட்டை தாண்டவராயன் தெருவைச் சேர்ந்த கோபிநாத் என்பவருடைய இருசக்கர வாகனத்தை அவர்கள் திருடியது வந்தது இவர்களிடம் இருந்து மூன்று இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது
இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், பூக்கடை , ஏழுகிணறு மற்றும் ஆந்திரா மாநிலம் போன்ற இடங்களில் திருடின இரு சக்கர வாகனங்களை வஉசி நகரில் கைப்பேசி கடை வைத்திருக்கும் சுரேஷ்@ கெஙகையா என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும்

அவர் திருப்பதி பேருந்து நிலையம் எதிரிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் பதுக்கி வைத்து இருந்த நான்கு இருசக்கர வாகனங்கள் என

மொத்தம் ஏழு இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

நீதிமன்றத்தில் ஆஜர் படூத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here