சென்னையில் பிரபல ரவுடி மாங்கா சதிஷ் சேப்பாக்கம் லாட்ஜில் வைத்து கைது :

0
485

வட சென்னையின் பிரபல ரவுடி மாங்கா சதிஷ் வயது 26 இவர்மீது வட சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன இவரது நண்பர்களான கமருதீன் வயது 29 குருபிரசாத் வயது 36 என்பவர்கள் வைத்தியநாதன் பாலம் அருகில் போதைப்பொருளை ரகசியமாக விற்பனை செய்வதாக தகவல் போலீசாருக்கு கிடைத்தது

அதை அடுத்து வடக்கு மண்டல இணை ஆணையர் துரை குமார் உத்தரவின்பேரில் தனிப்படை உதவி துணை ஆய்வாளர் முகம்மது புகாரி தலைமையில் தனிப்படை அமைத்து மாங்கா சதிஷை தேடிவந்தனர் மாங்கா சதீஷ் காவல்துறையினர் தேடுவதையறிந்து சேப்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர் அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா 1260 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது இந்த வழக்கில் மாங்கா சதீஷ் ,கமரூதின இருவரை போலீசார் கைது செய்துள்ளனர் தண்டையார்பேட்டை அம்மணி அம்மன் தோட்டத்தைச் சேர்ந்த குருபிரசாத்தை தேடிவருகின்றனர் கைது செய்யப்பட்ட மாங்கா சதீஷ்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறியதையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டது அவர் நல்ல நிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறியதை அடுத்து அவர் பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here