652 நாட்கள் குற்றவாளிக்கு பிணையில் வர முடியாத சிறை தண்டனை:

0
321

சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் உத்தரவின் பேரில் இரண்டு வருடகால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறிய தண்டையார்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி மீண்டும் சிறையில் அடைப்பு

தண்டையார்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் ஜான் என்கிற ஜான்சன்(26) என்பவர் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார்

இவர் மீது 14 குற்ற வழக்குகள் உள்ள நிலையை கடந்த ஜூலை 1ஆம் தேதி வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி திருந்தி வாழ போவதாக என வருங்காலத்தில் எந்த ஒரு செயலும் ஈடுபட மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்தார்

இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மீண்டும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்

இதனை அடுத்து இரண்டு வருட காலத்திற்கு எந்த ஒரு குற்ற செயலில் ஈடுபட மாட்டேன் என எழுதிக் கொடுத்த நன்னடத்தை பிணை பத்திரத்தை மீது குற்றத்திற்காக செயல்முறை நடுவராகிய வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சிவபிரசாத் குற்றவாளிகள் என்பவருக்கு சிறையில் இருந்த நாட்கள் மற்றும் மீதமுள்ள 625 நாட்கள் பிணையில் வெளிவரமுடியாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here