இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் தமிழகத்தில் 40 தலைமைச் செயலாளர் வந்துள்ளார்கள்.
வன்னியர் சமூகத்தில் இ.பி.ராயப்பா மட்டுமே தலைமைச் செயலாளர் பதவியில் இருந்தவர்.
திண்டுக்கல் மாவட்டம், அனுமந்தராயன் கோட்டை என்ற வன்னிய கிராமத்தில் பிறந்தார்.
இந்தியாவிலியே நேர்மையான அதிகாரி
ஒருபாய் கூட லஞ்சம் வாங்காதவர்
இராணுவ அதிகாரி,
மாவட்ட ஆட்சித்தலைவர்,
பல்வேறு அரசு துறைகளில் செயலாளர்
#இவர்_இராணுவத்துறையில்
இங்கிலாந்திற்கும்– ஜப்பானுக்கும் இடையே நடந்த இரண்டாம் உலகப்போரில் தலைசிறந்த அதிகாரியாக செயல்பட்டார்.
ஜப்பான் காரன் போட்ட வெடி குண்டை
வெடிக்காமல் செயலிழக்கச் செய்தார் இ.பி.ராயப்பா.
இக்காட்சியை போட்டோவாக பிடித்து
வைத்துள்ளான் வெள்ளைக்காரன்.
பர்மா போரிலும் பங்கு பெற்றார் வெற்றியும் கண்டார்.
போர் முடிந்து 8 பேர்கள் குழுவாக கால்நடையாகவே புறப்பட்டார்கள்.
அதில் இ.பி.ராயப்பா மட்டுமே டெல்லி வந்து சேர்ந்தார்.
மற்றவர்கள் வழியில் இறந்து விட்டார்கள்.
இவரது இராணுவ நடவடிக்கைகளை
பாராட்டி சர்வதேச பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து பாராளுமன்றமும் பாராட்டியது.
இவரது இராணுவ யுத்த சேவையைப் பாராட்டி ” மெம்பர் ஆப் தி பிரிட்டிஷ் எம்பயர் ” என்ற பட்டத்தை கவர்னர் ஜெனரல் மெளண்ட் பேட்டன் பிரபு வழங்கினார்.
இராணுவ சேவையை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு அரசு பணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.
கோவையில் சிறந்த கலெக்டராகச் செயல் பட்டார்,
கோவையில் கள்ள நோட்டு கும்பல் தலைவன் கிருஷ்ணனை கைது செய்து சாதனை படைத்தார்.
இச்சாதனையைப் பாராட்டி
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி தனது கைப்பட கடிதம் எழுதி இ.பி.ராயப்பவை பாராட்டினார்.
இவரது சிறந்த சேவையின் காரணமாக கோவையில் ராயப்பா நகர் உருவாக்கப்பட்டது.
ஓமந்தூர் ராமசாமி, காமராஜ் ஆகிய முதல்வர்களின் காலத்தில் அரசு செயலாளராகப் பதவி உயர்வுகள் பெற்று பல்வேறு துறைகளில் செயலாளர் பொறுப்பில் பணிபுரிந்தார்.
விற்பனை வரியை சரியாக செலுத்தாத
T V S, கோயங்கா போன்ற முதலாளிகளின் மீது துணிந்து கடும் நடவடிக்கை எடுத்தார்.
ரூபாய் 60 கோடியாக இருந்த விற்பனை வரியை முறையான நடவடிக்கை மூலம்
ரூபாய்-160 கோடியாக உயர்த்தினார் 1956 ல்.
இது தொடர்பாக பிரதமர் நேரு அவர்களிடம் புகார் செய்தார்கள் ;
இதுதான் புகார் என்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்ற துணிவான நடவடிக்கை எடுக்க எனக்கு மேலும் 14 ராயப்பாக்கள் தேவை எனக்கூறி புகார் கூறியவர்களை கன்டித்தார் பிரதமர் நேரு.
பின்னர் இ.பி.ராயப்பவை பாராட்டினார்
பிரதமர் நேரு.
நேர்மையான அதிகாரி என்ற காரணத்தால் ,
ஜனாதிபதி,
பிரதமர்,
இராணுவ தளபதி
போன்றோரின் பாராட்டை பெற்றார்.
14/11/1969 ல் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
06/04/1971 ல் வேறு துறைக்கு மாற்றினார் கருணாநிதி.
1971 பாராளுமன்ற தேர்தலில் காமராஜ் வெற்றி பெற்றார்- மரியாதை நிமித்தமாக நேரில் சென்று மாலை அணிவித்தார் இ.பி.ராயப்பா.
இதன் காரணமாக,
சட்டம் ஒழுங்கை காப்பதில் சிறந்த நிர்வாகியாக (STRAIGHT FORWARD)
தலையைச் செயலாளராக இ.பி.ராயப்பா செயல் பட்டாலும் காங்கிரஸ் சார்புடையவராக திமுக அரசு பார்த்தது, வேறு பொறுப்புக்கு இ.பி.ராயப்பாவை மாற்றினார் கருணாநிதி.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குக்கு சென்றார் இ.பி.ராயப்பா.
சொந்த வீட்டை விற்று வழக்கு நடத்தினார்.
இருப்பினும் தலைமைச் செயலாளர் தகுதி பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது.
தலைமைச் செயலாளர் சம்பளத்தை கொடுத்து விட்டு அதிகாரமில்லா சாதாரண தாசில்தார் போன்ற பொறுப்பில் இ.பி.ராயப்பவை போடுவதற்கு ஏற்பாடுகளை உருவாக்கினார் கருணாநிதி,
இதை அறிந்த இ.பி.ராயப்பா மனம் வருந்தி (Reason For The Conscience)
என்று குறிப்பிட்டு பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா செய்ததன் காரணமாக அரசு தர வேண்டிய ஓய்வூதியம் , உட்பட பணப் பலன்கள் ஏதும் கிடைக்கவில்லை.
















