பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு;

0
262

பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

செப்டம்பர் 17ந் தேதி தலைமைச்செயலகம், அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும்.

இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ அடித்தளம் அமைத்தவர் பெரியார்.

பெரியார் எழுதிய எழுத்துகள், பேசிய பேச்சுகள் யாரும் எழுத, பேச தயங்கியவை ஆகும்.

பெரியாரின் போராட்டம் குறித்து பேசுவது என்றால் அவையை 10 நாட்கள் ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும்.

பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here