தமிழகத்திற்கு கர்நாடகா காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்ற ஒரு வார்த்தையை ராகுல் காந்தி சொல்ல தைரியம் இருக்கிறதா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: கர்நாடகா அணையில் இன்று 62 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, கடந்த மாதம் இரு முறை உத்தரவிட்ட நிலையிலும் கர்நாடகாவில் தண்ணீர் இல்லை என கூறியிருந்தனர்.மேகதாது அணை கட்டுவதற்கு முன்பாகவே கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள் என்றால், அணை கட்டினால் அவ்வளவுதான். ஒரு சொட்டு குடிநீர் கூட கிடைக்காது. எனவே தமிழக முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு செல்லக் கூடாது.மாநிலங்களவையில் மத்திய அமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 16.02.2026&ஆம் நாளிட்ட தீர்ப்பின் முதல் அம்சமாக, இந்த ஒப்பந்தங்களின் கூறுகள் இப்போதும் செல்லும் என்று கூறப்பட்டிருக்கிறது.”மாறியதால், மேலாதிக்கக் கோட்பாடு செயல்படுவதற்கு இனி இடமில்லை. 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளின் இரு ஒப்பந்தங்களும் எந்தவொரு அரசியல் ஏற்பாட்டையும் கொண்டிருக்கவில்லை; மேலும் அவை இந்தியாவின் இறையாண்மையின் எந்தவொரு அம்சத்தையும் பாதிக்கவுமில்லை. மாறாக, இந்த ஒப்பந்தங்கள் எந்தவொரு அரசியல் கூறுகளும் இல்லாத, பரந்த பொது நலன் சார்ந்த விஷயங்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளன. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இந்த ஒப்பந்தங்கள் செயலற்றவை என்றோ அல்லது முற்றிலும் காலாவதியானவை என்றோ ஆகிவிடாது) என்று கூறப்பட்டுள்ளது. கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது என்பது தான் இதன் பொருள் ஆகும். இந்த உண்மையை மறைத்து விட்டு, மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய அரசு கூறுவது திசை திருப்பும் செயல்.
அதுமட்டுமின்றி, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும் கர்நாடகத்தில் நடைமுறையில் உள்ள பாசனத் திட்டங்கள் பட்டியலிடப்பட்டு, வேறு எந்த புதிய பாசனத் திட்டமும் செயல்படுத்தப்படக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது மேகதாது அணையை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் இராஜ் பூஷன் சவுத்ரி எப்படி கூற முடியும்? இந்த அடிப்படையில் தான் சிவசமுத்திரம் அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட போது, அது திருப்பி அனுப்பப்பட்டதாக அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு முன் மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த கஜேந்திர ஷெகாவத் அவர்களை, கடந்த 16.07.2021&ஆம் ஆண்டு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்தித்து மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியது. அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஷெகாவத், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசால் மேகதாது அணையை கட்ட முடியாது என்று உறுதியளித்தார்.















