இந்தியாவில் அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு;

0
258

கொரோனா பாதிப்பு  விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 5 ஆயிரத்து 439-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 28 ஆயிரத்து 393 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 35 ஆயிரத்து 852 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 64 ஆயிரத்து 667 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 874 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 212 கோடியே 39 லட்சத்து 92 ஆயிரத்து 816 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here