2021-ம் ஆண்டில் இணையவழி குற்ற வழக்குகள் 110% உயர்வு;

0
327

குற்ற வழக்குகளின் எண்ணிக்கை முந்தின ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த 2021-ம் ஆண்டில் 111 சதவீதம் உயர்ந்து உள்ளது என தேசிய குற்ற ஆவணங்கள் வாரியம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது. இவற்றில் பாலியல் சார்ந்த துன்புறுத்தல் வழக்குகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இணையவழி குற்றங்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, டெல்லி போலீசார் சமூக ஊடக மையம் ஒன்றை அமைத்து உள்ளனர். எனினும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த வழக்குகளில் பெருமளவில், இணையவழி மோசடி, ஆன்லைன் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தகவல்களை பகிருதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய விசயங்களே காணப்படுகின்றன. கடந்த ஆண்டு, 356க்கும் கூடுதலான இணையவழி குற்ற சம்பவங்கள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் குற்றச்சாட்டுக்கு உள்ளான பலரும், பாலியல் செயல்கள் சார்ந்த தகவல்கள் அல்லது வீடியோக்கள் உள்ளிட்ட விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த விவரங்களை பகுப்பாய்வு செய்ததில், குற்ற சம்பவங்களுக்கான நோக்கங்கள் ஆனது, மோசடி, பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் ஆகியவையாக இருந்துள்ளன. புகார்கள் அளித்தவர்களில் பலர் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட டீன்-ஏஜ் சிறுமிகளாக உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here