திருவொற்றியூர், மார்ச். 13 முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலர் மீது 6 பிரிவின் கீழ் மீது மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். திருவொற்றியூர் தேரடியில் முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் தலைமையில் அதிமுகவினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக், முன்னாள் கவுன்சிலர் ஜோசப் உட்பட அதிமுக கட்சியைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்















