காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மாயமான மீனவர்கள் மியான்மர் நாட்டில் சிக்கியதாக வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு;

0
398

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதிகளை சேர்ந்த 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று மாயமாகினர் இதனையடுத்து 55 நாட்களுக்கு பிறகு மியான்மர் நாட்டில் விசைப்படகு கரை ஒதுங்கி இருப்பதாக மியான்மார் நாட்டு கடலோர காவல் படையினர் தகவல் தெரிவித்தனர் இதனை அடுத்து அங்கு நிலவும் மோசமான வானிலையால் மீனவர்களை உடனடியாக  தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் இன்று காலை சிறப்பு விமானம் மூலம் மீனவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் வானிலை மாறுதல்களால் விமானம் இயக்கப்படாமல் தடை செய்யப்பட்டது இதனையடுத்து எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் இருக்கும் மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்த வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் பின்னர் தனது சொந்த நிதியிலிருந்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் இதனையடுத்து செய்தியாளரிடம் பேசிய  கலாநிதி வீராசாமி வானிலை மாறுபாட்டால் மீனவர்களை அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும் கண்டிப்பாக அக்டோபர் 7 ஆம் தேதி மீனவர்களை மியான்மார் நாட்டிலிருந்து சென்னைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் மேலும் மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும்  செய்து கொடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்  ஜூலை மாதம் மாயமான மீனவர்களை தமிழக மீன்வளத்துறை  உடனடியாக அக்கறையுடன் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தால் அவர்கள் திசைமாறி மியான்மார் நாட்டுக்கு சென்றிருக்க மாட்டார்கள் என தெரிவித்தார்  கடலில் மாயமான மீனவர்கள்  அவர்கள் இருக்கும் இடத்தை உறவினர்களுக்கு தெரிவித்த பின்னால்தான் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தெரியும் அளவிற்கு  தமிழக மீன்வளத்துறை  நிலைமை இருப்பதாக குற்றம் சாட்டினார்  மியான்மார் நாட்டில் இருக்கும் 9 மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்த கலாநிதி வீராசாமி மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பகுதி செயலாளர் கேபிசங்கர் ஆகியோர் அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here