கிரீன் வேலி மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி,பேர்ணாம்பட்டு
13.01.2023, வெள்ளி கிழமை கிரீன் வேலி மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி பேர்ணாம்பட்டு சேர்ந்த மாணவ மாணவிகள்,
சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நடத்தினர். குடியாத்தம் இன்னர் வீல் கிளப்(Inner wheel club of gudiyatham) தலைவர் திருமதி.கீதாலஷ்மி மற்றும் செயலாளர் திருமதி.பிரியா குப்புசுவாமி, காவல்துறை துணை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் சாலை பாதுகாப்பு விதிகள் பற்றி வாசகங்களுடன் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரையில் ஊர்வலம் சென்றனர்.மேலும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், அதிவேகப் பயனும் குறித்தும், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதைக் குறித்தும் நாடகங்களை நடித்து காட்டினார்கள். மேலும்
மாணவ மாணவியர் சாலையில் தலைக்கவசம் அணிந்து வாகனங்களில் வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டியதும்,அணியாதவர்களை அணியும் படி அறிவுறுத்தியதும் குறிப்பிடத்தகக்கது.
Home Uncategorized கிரீன் வேலி மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி பேர்ணாம்பட்டு சேர்ந்த மாணவ மாணவிகள், சாலை பாதுகாப்பு...


















