சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறின் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
காசிமேடு பகுதியை சேர்ந்தவர் தனுஷ் நேற்று இரவு வ.உ.சி நகரில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டு இருந்தபோது மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டபட்டார்.ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனை தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கபட்ட நிலையில், தனுஷ் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் தப்பியோடிய 4பேரை தேடி வந்தனர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து சோதனை மேற்கொண்டதில் புதுவண்ணாரப்பேட்டை பாரதியார் நகர் பகுதியில் பதுங்கி இருந்த கிஷோர், முரளி என்கிற பாம்முரளி ,அப்பு என்கிற சசிகுமார் வாத்து என்ற லோகநாதன் ஆகிய 4 பேரை கைது செய்தனர் .விசாரணையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தகராறின் காரணமாக தனுஷை வெட்டியதாக ஒப்பு கொண்டுள்ளனர்.
4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அவர்களை புழல் சிறையில் அடைத்தன














