கேஸ் விலை எற்றம் குறித்து தமிழக அரசுக்கு கவலை இல்லை எனவே பெண்கள் வீதிக்கு வந்துவிட்டதால் இந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் உறுதி என திமுகவின் அமைப்பு பொது செயலாளர் ஆர்.ஆஸ் பாரதி கருத்து*
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கடுமையாக உயர்த்திய மத்திய அரசைஅரசை கண்டித்து ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட திமுக மகளிரணி சார்பில் சென்னை ஆர்.கே நகர் வைத்தியநாதன் பாலம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமானது திமுகவின் அமைப்பு பொது செயலாளர் ஆர்.எஸ் பாரதி , மாநில மகளிர் அணி துணை செயலாளர் விஜயா தாய் அன்பன் தலைமையில் நடைபெற்றது.இதில் சென்னை மாவட்ட மகளிர் அணியினர் , மாவட்ட செயலாளர்கள் ,உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் கலந்து கொண்டு மத்திய அரசினை கண்டித்து கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை பதிவு செய்தனர்
*பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர் எஸ் பாரதி*
ஒரே மாதத்தில் 100ரூபாய் கேஸ் விலை ஏற்றப்பட்டு உள்ளது.
மானியம் தரவேண்டிய நேரத்தில் விலைவிலை உயர்த்தப்பட்டு உள்ளது.
மோடி ஆட்சிக்கு வரும் போது 350ரூபாய் இருந்தது இப்போது 710ஆக விலை உள்ளது.
மக்களின் எதிர்பை தெரிவிக்கும் வகையில் இந்த போரட்டம் நடைபெறுகின்றது
இந்த விலை ஏற்றம் குறித்து அதிமுக அரசுக்கு கவலை இல்லை .இன்னும் 3மாதங்கள் தான் அதிமுக ஆட்சி உள்ளதால் கொள்ளை அடிப்பதை தான் நோக்கமாக கொண்டு உள்ளனர்.
பெண்கள் வீதிக்கு வந்து விட்டதால் இந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.














