நான்கு மீனவர்கள் கைது இலங்கைக் கடற்படையினர் அராஜகம் மத்திய மாநில அரசு இதற்கு ஒரு முடிவு எடுக்குமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு;

0
139

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து சிபிராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற நான்கு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து காங்கேஷன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று நெடுந்தீவு அருகை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி
INT TN 08.MM 005 என்ற எண் கொண்ட சிபிராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற பார்த்திபன், சாரதி, முரளி, ராமதாஸ், ஆகிய நான்கு மீனவர்களை இலங்கை கடற்படை நெடுந்தீவு பகுதியில் கைது செய்துள்ளது மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக தற்போது இலங்கை காங்கேஷன் கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் விசாரணைக்கு பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பின் மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது தமிழக கடலோரப் பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here