சென்னை திருவெற்றியூர் விவேகானந்தா அவென்யூ எல்லை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் இவருடைய மகன் கவின் சித்தார் வயது (19) இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி பி ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் நேற்று இவரும் இவருடைய நண்பர் சுகாஸ் வயசு (19), சரண்குமார் வயசு (19) ஆகிய மூவரும் நேற்று மாலை தண்டையார்பேட்டையில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு அருகில் இருந்த மார்ஷ்லிங் யார்டில் ஒன்றில் நண்பர்களுடன் சேர்ந்து போட்டோ செல்பி எடுத்தும் ரீல்ஸ் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர் அப்பொழுது கவின் சித்தார்த் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டேங்கர் ரயில் மீது ஏறி ரீல்ஸ் செய்து கொண்டிருக்க அவருடைய நண்பர்கள் கீழே இருந்தபடி மொபைல் போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர் திடீரென எதிர்பாராத விதமாக மேலிருந்த உயிரிழத்த மின்சாரம் கவின் சித்தார் மேல் பாய்ந்ததும் அலறியபடி உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார் இதை பார்த்த நண்பர்கள் கதறி அழுது கொண்டிருந்ததை பார்த்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் ரகுபதி மின்சாரம் தாக்கி உயர் இறந்த கவின் சித்தார்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ரீல்ஸ் எடுத்து வீடியோ பதிவு செய்து லைக் வாங்குவதற்காக கல்லூரி மாணவனின் உயிர் பிரிந்த சம்பவம் திருவெற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது















