தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் சென்னை பாரிமுனையில் உள்ள ஜி.பி.ஓ. தலைமை தபால் நிலைய கட்டிட வளாகத்தில் வருகின்ற 22 ஆம் தேதி நடைபெறுகிறது இது குறித்து முதன்மை அஞ்சலக அதிகாரி ஸ்வாதி மதுரிமா கூறியது
அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம் வருகின்ற 22 ஆம் தேதி 12:00 மணி அளவில் பாரிமுனையில் உள்ள தலைமை அஞ்சலக அலுவலகத்தில் நடைபெறுகிறது தலைமை அஞ்சலக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் குறைகள் குறித்து கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் வரும் 21ஆம் தேதிக்குள் தலைமை அஞ்சலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் அதன்படி அவர்களுடைய குறைகள் நிவர்த்தி செய்யப்படும் மேலும் இந்த முகாமில்
தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி, நேரம் அனுப்பியவர் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை (மணியார்டர்), துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். புகார் சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு அவர் கூறினார்.












