காசிமேட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது:

0
528

 

சென்னை காசிமேடு பாலகிருஷ்ணா தெருவில் பெண் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக காசிமேடு N4 காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

ரகசிய தகவலின் அடிப்படையில் ராயபுரம் சரக உதவி ஆணையாளர் உக்கிரபாண்டியன் ஆணைக்கிணங்க N4 மீன்பிடி துறைமுக காவல் நிலைய ஆய்வாளர் இசைக்கிபாண்டியன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ் பூபாலன் விநாயகம் மற்றும் தலைமை காவலர்கள் நல்லமணி கார்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை நேற்று பின்தொடர்ந்து சென்றனர் ரெட்கில்ஸ் வரை பின்தொடர்ந்து சென்று அங்கு காரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்ட பொழுது

மணலிபுதுநகர் பகுதியை சார்ந்த பார்வதி என்ற பெண் காசிமேட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் குற்ற வழக்கில் தொடர்புடைய வண்டலூர் பகுதியைச் சார்ந்த கனகராஜ் நரேஷ் குமார் ஆகிய 3 பேரும் சில தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் ஆந்திராவிலிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்தது தெரிய வந்தது

இதனை தொடர்ந்து 4 கிலோ கஞ்சா மற்றும் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் மேலும் பார்வதி மீது ஏற்கனவே எண்ணூர் எம்கேபி நகர் ரெட்கில்ஸ் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக வழக்கு நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது இதேபோன்று கனகராஜ் மற்றும் நரேஷ் குமார் மீதும் ஏற்கனவே வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது இதனை தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய புழல் சிறையில் அடைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here