திருவொற்றியூர், சென்னை, பொன்னேரி நெடுஞ்சாலை பகுதியில், பைக், டிப்பர் லாரி மோதியதில், கிரேன் ஆபரேட்டர் பலியானார்,
சென்னை,திருவொற்றியூர், சரஸ்வதி நகர், எட்டாவது தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் மாதையன் (53), இவர், கிரேன் ஆபரேட்டர் ஆவார், இவர், பொன்னேரி நெடுஞ்சாலை, எம்.எப்.எல் அருகே பைக்கில் வந்துக்கொண்டிருந்தார், அப்போது, அங்கு வந்த டிப்பர் லாரி ஒன்று , அவர் பைக் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மாதையன் , இடுப்பு உள்ளிட்ட பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார், இது தொடர்பாக, மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,















