திருவள்ளூர் மாவட்டம்
திருத்தணி தொகுதி
பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகம் சந்தை திடல் முன்புறம் இன்று 27.08.2021
தலித் மக்கள் முன்னணி சார்பாக நீதிகேட்டு ஆர்ப்பாட்டம்.
கேசவராஜகுப்பம் ஊராட்சி மன்ற தலைவியாக அருந்ததி இனத்தை சேர்ந்த திருமதி.கலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.கடந்த அதிமுக ஆட்சியில் இவரை யாரும் தொந்தரவு செய்யாமல் பணியாற்றினார்.ஆனால் திமுக ஆட்சி வந்து 100 நாட்களை கடந்து உள்ள சூழ்நிலையில் கேசவராஜகுப்பத்தை சேர்ந்த திமுக முக்கிய புள்ளி முன்னாள் ஒன்றிய செயலாளர் திருமலை லோகநாதன் இந்த பெண் ஊராட்சி மன்ற தலைவியை மிரட்டுவதாகவும் பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும், பெண் தலைவியிடம் கமிஷன் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.திமுக ஆட்சிக்கு வந்தால் விடியல் தருவீர்கள் என்று நம்பி தானே வாக்களித்தோம்,இப்படி அருந்ததி சமுதாயத்தை மிரட்டுவதற்கா வாக்களித்தோம்,தெரிந்திருந்தால் வாக்களித்து இருக்கமாட்டோம் என்று கடுமையாக விமர்சனம் செய்து கோஷம் எழுப்பினார்கள். திருத்தணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.சந்திரன் அவர்கள் எங்கள் வாக்குகளை பெற்றுக்கொண்டு ஏன் எங்களை கண்டுகொள்வதில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
ராஜாநகரம் மோட்டூரில் 20-ஆண்டுகளாக பட்டா வழங்கியும் கோர்ட் உத்தரவிட்டும் இன்னும் அந்த நிலங்களுக்கு சர்வே செய்து வழங்கப்படாமல் இருப்பது MLA- திரு.சந்திரனுக்கு தெரியவில்லையா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.சந்திரனின் பேச்சுக்களை நம்பி சந்திரனுக்கு வாக்களித்தோமே எங்களுக்கு இப்படியா துரோகம் இழைப்பது என்று கோபமாக கோஷம் எழுப்பினார்கள்.100-நாள் வேலைத்திட்டத்தில் மேற்பார்வையாளரை நியமிக்கும் பொறுப்பு பெண் தலைவிக்கு தான் உள்ளது.ஆனால் திமுகவின் திருமலை லோகநாதனும் வட்டார வளர்ச்சி அதிகாரியும் கூட்டாக இணைந்து அவர்கள் விருப்பப்படி ஆட்களை போடுவதும் அருந்ததியர் பெண் தலைவியுடைய அதிகாரங்களை குறைப்பதுமாக உள்ளனர்.BDO- அரசியல்வாதியா பொதுமக்களுக்கான அதிகாரியா என்று கேள்வி எழுப்பினார்கள்..?
தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் விடியல் தருவேன் என்று சொன்னது…உண்மை தானா என்று பதில் கூற வேண்டும் என்றும் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் திமுக-வினரின் அதிகார மிரட்டல்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர் அருந்ததி சமூகத்தினர்.
BDO-அலுவலகத்தை இழுத்து பூட்டு போடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர் அருந்ததியினர்.
மேலும் பல கோரிக்கைகளை விடுத்துள்ளனர் அருந்ததியினர்.
பட்டா இங்கே நிலம் எங்கே என்று தலித் மக்களின் குரல் ஓங்கி ஒலித்தது.
R.K.பேட்டை-ராஜா நகரம் தலித் மக்களின் 27-ஆண்டு கால போராட்டத்திற்கு எப்பொழுது விடிவு கிடைக்கும்…?
புயலாலும் மழையாலும் சேதமடையும் தலைவர்களின் சிலைகள் சீரமைக்க அனுமதிக்கும் பொழுது புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை மட்டும் சீரமைக்க தடுப்பதின் நோக்கம் என்ன..?
திருத்தணி தொகுதி முழுவதும் தலித் மக்களுக்கு வழங்கப்படும் வீட்டுமனைகள் ஆளுகிற அரசியல் கட்சியினருக்கு பகிர்ந்து அளிப்பது தான் ஆதிதிராவிடர் நலத்துறையின் கொள்கையா..?
அரசு பள்ளிகளில் மாணவர்கள் நலனுக்காக உருவாக்கப்படும் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தில் தலைமை தாங்க தலித் மக்களுக்கு இடமளிப்பது இல்லையே ஏன்..?
70 நாட்களில் இந்து கோயில்களின் 700 ஏக்கர் நிலத்தை மீட்ட இந்து அறநிலைத்துறை பல ஆண்டுகள் தலித் மக்கள் 13 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை வருவாய் துறை மீட்காதது ஏன்..?
பல ஆண்டுகளாக பட்டா நிலங்களை அளவீடு செய்யாதது ஏன்..?
புளியந்தோப்பு மட்டுமல்ல தலித் மக்களின் குடியிருப்புகள் அனைத்து ஆட்சியிலும் தரமற்றதாக உருவாக்கப்படுவது நவீன சமூக நீதியா..?
வெங்கடாபுரம் , கர்லம்பாக்கத்தில் 20 ஆண்டுகளாக வீட்டுமனைகள் எங்கே..?
கோணசமுத்திரம், பாண்டரவேடு, கொல்லாலகுப்பம், பெருமாநல்லூர் , ஈச்சம்பாடி , புதுப்பட்டு , முனிரெட்டி கண்டிகை, அத்திமாஞ்சேரி , வெளியகரம் , கீச்சலம் நொச்சிலி , காக்களூர், பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட பல கிராமங்களில் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்..?
நெடியம் கிராமம் தாமரை குளத்திற்கு தீர்வு என்ன..?
வாணிவிலாசபுரத்தில் 40 ஆண்டுகள் கட்டிய வீடுகள் எங்கே..?
புண்ணியம் கிராமத்தில் வீடுகள் மீது செல்லும் மின்கம்பியை நீக்குவது எப்போது..?
என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவல்துறை பாதுகாப்புடன் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.














