நாடு முழுவதும் இருந்து நாளொன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பக்தர்கள் வரை இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி
திருக்கோவிலுக்கு வந்து செல்வதும் அப்படி வரும் பக்தர்கள் முதலில் புனிதமாக கருதி நீராடுவதும் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில்
இராமேஸ்வரம் நகராட்சியும் தனியார் தங்கும் விடுதியினரும் போட்டி போட்டு கொண்டு சாக்கடை கழிவு நீரை திறந்து விடுவதை கண்டித்தும்
இது சம்மந்தமாக மாண்புமிகு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பொது நல வழக்கு மீதான விசாரணையில் அக்னி தீர்த்தத்தில் கழிவு நீர் கலக்கவில்லை என்றும் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்படுகிறது என்றும் உண்மைக்கு மாறான பதில் கூறிய இராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும்
06/01/2025 காலை சுமார் 10.30 மணியளவில் சிஐடியூ தொழிற்சங்கத்தின் சார்பில் அக்னி தீர்த்தக்கரையை “துடைப்பை கட்டையுடன் தூய்மைப்படுத்தும்” போராட்டம் தோழர் N.P.செந்தில் மாவட்ட துணை செயலாளர் CITU தலைமையிலும்
M.கருணாமூர்த்தி மாவட்ட துணை செயலாளர் Citu முன்னிலையிலும் நடைபெற்றது.
தோழர் சிவாஜி மாவட்ட செயலாளர் Citu மற்றும்
CITU தலைவர்கள் A.சுடலைக்காசி, D.ராமச்சந்திரபாபு, A.முருகன், S.சீனிவாசன் மற்றும் ஜனநாயக மாதர் சங்க தாலுகா செயலாளர் A.ஆரோக்கிய நிர்மலா உள்ளிட்ட 150 – க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
















