வெவ்வேறு இடங்களில் வாகன சோதனையில் , 37 கிலோ கஞ்சா பறிமுதல்!

0
482

திருவொற்றியூர்,பிப்,12- சென்னை, எண்ணூர் மற்றும் வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில், வாகான சோதனையில் , 37 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன,

சென்னை, எண்ணூர், முருகன் கோவில் தெரு, சுனாமி குடியிருப்பு,பாரதியார் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த முரளி மகன் சசிக்குமார்(19), சேகர் மகன் இளங்கோ(32), வேலாயுதம் மகன் பாபு(46) , ஆகியோர் நேற்று முன் தினம் இரவு, ஜோதி நகர் எடை மேடை அருகில், ஆட்டோவில் சுற்றி திரிந்தனர், அப்போது, கலால் போலீஸ் அதிகாரிகள் , சந்தேகத்தின் பேரில், ஆட்டோவை சோதனையிட்டதில், கஞ்சா இருந்தது, பின்னர், அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், ராஜி என்பவர் வீட்டில் பதுக்கி இருந்த 6 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர், அவர்களிடம் இருந்து, ஆட்டோ, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதை போன்று, வியாசர்பாடி, புது நகரில், வீடு ஒன்றில், சோதனையிட்டு,30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர், ரயில் மூலம் கடத்து, கஞ்சா விற்க முயற்சித்த ,அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த்(28), ராதாக்கிருஷ்ணன்(30), ஆகியோரை கைது செய்தனர். இதைப்போன்று, வியாசர்பாடி அசோக்பில்லர் அருகில், ஆட்டோவில் வந்த விஜய்(21) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து, ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here