கொரோனா பணிகளில் அனைவரையும் ஈடுபட்டுள்ளோம் திமுக தலைவர் ஸ்டாலினை தவிர கரோனா பணிகளில் யாரு வேலை செய்கிறார்கள் யார் குறை சொல்லுகிறார்கள் என்று மக்களுக்கு தெரியும் இதன் தாக்கம் வருகின்ற தேர்தலில் தெரியவரும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்
சென்னை புது வண்ணாரப்பேட்டை மீனவ குடியிருப்பு பகுதிகளில் கரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்த எழை எளிய மக்களுக்கு அரிசி பைகளை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன்
தண்டையார்பேட்டை மண்டலத்தில் நோய் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது
திமுக தலைவர் ஸ்டாலின் கரோனா மொத்த பாதிப்புகளை கூறி மக்களிடம் ஒரு பீதியை ஏற்படுத்துகிறார் இதனால் கரோனா பரிசோதனை செய்ய மக்கள் அச்ச படுகின்றனர்
புரிதல் இல்லாமல் ஸ்டாலின் அறிக்கை விடுகிறார் இது புறியாதலின் உட்சகட்டம்
ஐசிஎம்ர் என்ற அமைப்பு சுட்டிக்காட்டி 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக தவறான தகவலை சொல்லுகிறார் ஸ்டாலின்.
முதலில் அது ஐசிஎம்ர் அல்ல ஐஎம்ஏ என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும் மேலும் அதன் தமிழ்நாடு செயலாளர் எதிர்த்து அறிக்கை விடுகிறார் இது தவறான தகவல் என்று கூறினார்
கரோனா காலத்தில் வெவ்வேறு காரணங்களுக்காக உயிரிழந்த மருத்துவர்களை கரோனாவால் உயிரிழந்தனர் என்று ஸ்டாலின் சொல்லுவது என்ன நியாயம்
அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி என்று அந்த கட்சி தலைவர் முருகன் கூறியுள்ளார்
5 மாதங்களாக நாங்கள் ஆற்றிய கொரோனா பணி மக்களின் பேராதரவு பெற்றுள்ளது இதன் தாக்கம் வருகின்ற தேர்தலில் தெரியவரும் என்று நம்புகிறோம்