முப்பெரும் விழாவை முன்னிட்டு சென்னை திருவொற்றியூரில் திராவிட முன்னேற்ற கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை ,திருவொற்றியூர் பகுதி கழக மாணவரணி மாநில செயலாளர் கவி கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆன்லைன் வகுப்பிற்கு படிக்க இயலாத இருக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு லேப்டாப், செல்போன் வழங்கியும், அதேபோல் ஐ.எ.எஸ் படிக்கும் மாணவர்களுக்கு அதனுடைய புத்தகத்தையும் வழங்கினர். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு தையல் இயந்திரங்களும், மீனவ மக்களுக்கு மீன் வியாபாரம் செய்வதற்கான அன்னக் குடைகளும், தூய்மைப் பணியாளர்கள் அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பையனை,300 பேருக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி , நா மனோகரன் உள்ளிட்ட ஏராளமான திமுக வினர் கலந்து கொண்டனர்.













