சென்னை கொருக்குப்பேட்டையில் வாகனத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை காவல்துறையினர் இன்று பறிமுதல் செய்தனர்
சென்னை வண்ணாரப்பேட்டையில் குட்டி யானை லோடு வேன் மூலமாக செம்மரக்கட்டைகள் கடத்துவதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சிவ பிரசாத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது துணை ஆணையாளர் தலைமையில் தனிப்படை அமைத்து சோதனையிட்டனர் அப்பொழுது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள முத்தையா முதலி தெரு பகுதியில் சந்தேகத்திற்கு இணங்க லோடு வேன் ஒன்று சதாம் உசேன் என்பவருக்கு சொந்தமான கார் பார்க்கிங்கில் பார்க்கிங் செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து முழு குற்றவாளிகளையும் கைது செய்வதற்காக இரவு முழுவதும் காவலர்கள் அப்பகுதி முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்
இதனைத் தொடர்ந்து இன்று காலையில் துணை ஆணையாளர் சிவபிரசாத் வனத்துறை அலுவலர் ராஜேஷ் தலைமையில் மூன்று குழுக்களாகப் பிரிந்து இன்று காலையில் சோதனையிட்டனர் அப்பொழுது கார் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்ட லோடு வேனில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1107 கிலோ செம்மரக்கட்டைகளை கடத்திக் கொண்டு வந்து மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது
மேலும் செம்மரக்கட்டைகள் தெரியாத வண்ணம் இருப்பதற்காக மரத்தாலான பெட்டியின் அடியில் செம்மரக்கட்டைகளை போட்டுவிட்டு சந்தேகம் வராத அளவிற்கு கட்டைகளின் மேற்புறமாக ஸ்டீல் பைப்புகளை வைத்து மறைத்து கொண்டு வந்திருப்பது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து செம்மரக்கட்டைகளை வனத்துறை அலுவலர்கள் கைப்பற்றினர்
வண்ணாரப்பேட்டை சரக துணை ஆணையாளர் சிவபிரசாத் கூறுகையில் செம்மரக்கட்டைகள் ஆந்திரா பகுதியில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்றும் மேலும் லோடு வேனின் உரிமையாளர் தலைமறைவாகி இருப்பதனால் குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்













