அரசு பள்ளியில் மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை உற்பட இரண்டு ஆசிரியை பணியிடை நீக்கம்;

0
275

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி உட்பட்ட குமாரபாளையம் அரசு பள்ளி செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளியில், 6ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளை மட்டும் பள்ளியின் தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் அறிவியல் ஆசிரியை சித்ரா ஆகிய இருவரும் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்யும் படி கூறி கட்டாயபடுத்தி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தார்கள்.மீறினால் கோவபட்டு அடிப்பார்கள் என பள்ளியில் நடக்கும் கொடுமைகளை பற்றி மாணவிகள் கூறிய வீடியோ சமூக வலைத்தளங்கள் வைரலாக பரவியதை அடுத்து, வீடியோவில் கூறியவை உண்மை தானா? என்பதை கண்டறிய, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில், முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் ஜெகதீசன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் கோவிந்தசாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் குமாரபாளையம் அரசு பள்ளிக்கு நேரில் சென்று அங்கு உள்ள பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசியர்கள் மற்றும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 6ம் வகுப்பு மாணவி இருவர் மற்றும் அவரது பெற்றோர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பள்ளி குழந்தைகளை கடந்த ஒரு மாதமாக கழிவறைகளை சுத்தம் செய்யப்பட்டு வருவதை கண்டறிந்தனர். இந்த விசாரணை அடிப்படையில் குமாரபாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இளமதி ஈஸ்வரி மற்றும் அறிவியல் ஆசிரியர் சித்ரா ஆகிய இருவரையும் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.(திருப்பூர் மாவட்ட நிருபர் உடுமலை ஆனந்தகுமார்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here