தமிழகத்தின் 40 நாடாளுமன்ற தொகுதிகளும் எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு ;

0
215

நாற்பதும் நமதா ? நாடும் நமதா. தமிழகத்தின் 40 நாடாளுமன்ற தொகுதிகளும் எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அளிக்கப் போகிறது!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநி லங்களோடும் ஒப்பிட்டால் பெரும்பா லான வளர்ச்சி குறியீடுகளில் முன் னணி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. தமிழகத்தை அவ்வாறான வளர்ச்சிக் கூறுகளுக்கு கொண்டு சேர்த்துடும் நமக்கு இந்தியா முழுமை க்கும் ஆன கூட்டாட்சி முறைக்கும் பங்களிக்க வேண்டிய தேர்தல் ஜன நாயக கடமையும் இருக்கிறது என்பதை இந்த தேர்தலும் வலியுறுத்துவதாகவே இருக்கிறது.

அதன் வழியாக மாநில சுயாட்சியை, மதச்சார்பின்மையை, சமூக சமத்து வத்தை, சகோதரத்துவத்தை, சமூக நீதியை, சமூக நல்லிணக்கத்தை இந்தியா முழுமையும் நிலை நாட்ட வேண்டிய பொறுப்பும் நமக்குள்ளது.

மாநில சுயாட்சி
மத்தியில் கூட்டாட்சி உரிமை

தமிழ்நாட்டைப் போல வலுவான சுய ஆட்சியை வலியுறுத்தும் மாநிலங்கள் தான் மத்தியில் கூட்டாட்சிக்கு அடிப் படையாக இருக்க முடியும் . தமிழகம் மட்டுமே வலிமையான அதிகாரம் மற் றும் தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருந்தால் மட்டும் போதாது; இந்தியா வின் அனைத்து மாநிலங்களும் அவ் வாறான மாற்றம் பெற்றிட பாடுபட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

வலிமையான வளமான மாநிலமாக இருந்தால் தான் மக்களுக்கு நன்மை கள் பல செய்திட முடியும். மாநில சுயாட்சிக்கான அதிகாரங்கள் பறிக்க ப்படுமானால் எந்த ஒரு நன்மையும் செய்து விட முடியாது.

ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி வரி மூலமாக மாநிலங்க ளின் நிதி உரிமை பறிக்கப்பட்டிருக் கிறது. நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கை மூலம் நமது கல்வி உரிமை கள் மறுக்கப்பட்டும் இருக்கிறது. ஒன் றிய அரசின் பல்வேறு தொழிலாளர் விவசாய சட்டங்கள் மக்களுக்கு விரோதமானதாக இருக்கின்றன. ஆளுநர்கள் மூலமாக மாநிலத்தில் இரட்டை ஆட்சி முறையை நடத்த முயற்சி நடக்கிறது.

இவற்றையெல்லாம் தடுத்திட நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் மக்கள் கவனத்து டன், சரியான அரசியல் கட்சிகளின் கூட்டணிக்கு வாக்களித்திருக்க வேண்டும். நாட்டின் கூட்டாட்சியிலும் தமிழகத்தை பங்கு பெறுவதற்கான நல் வாய்ப் பினை அளித்திருக்க வேண்டும்.

மூன்று கூட்டணிகள்
இடையே தான் போட்டி

இப்போதைய 18வது மக்களவைக் கான தேர்தலில் தி.மு.க , அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய மூன்று கட்சிகளின் தலைமையிலான தேர்தல் கூட்டணி கள் இறுதியாகப்பட்டு களம் கண்டதை பார்க்கமுடிந்தது. நேரடி போட்டியே இந்த மூன்று கூட் டணி கட்சிகளுக்கிடையே தான் இருந்தது. தனித்து போட்டி யிட்ட நாம் தமிழர் கட்சியானது வாக் குகளை பிரித்து கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்துவதாகவே இருந்திடும் என்றே கருத்து தெரிவிக்கப் பட்டிருந்தது.

தி.மு.க 21 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ் புதுச்சேரி உள்ளிட்ட. 10 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியானவை தலா 2 தொகுதிகள் என 6 தொகுதிகளிலும், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு தொகுதி என மூன்று தொகுதிகளிலும் ஆக மொத்தம் 40 தொகுதிகளிலும் போட்டி யிட்டிருந்தன.

அ.தி.மு.க 34 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சிகளான தேசிய முற் போக்கு திராவிட கழகம் 5 தொகுதி களிலும், இந்திய சமூக ஜனநாயக கட்சி எனும் எஸ்.டி.பி.ஐ ஒரு தொகுதி யிலும் ஆக 40 தொகுதிகளில் போட்டி யிட்டிருந்தன.

பா.ஜ.க 23 மற்றும் புதுச் சேரி – 1,தொகுதிகளி லும், அதன் கூட்டணி கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி எனும் பா.ம.க 10 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங் கிரஸ் எனும் தா.மா.கா 3 தொகுதி களிலும் ,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எனும் அ.ம.மு.க 2 தொகுதி களிலும், அ.தி.மு.க (பன்னீர்) பிரிவு ஒரு தொகுதியிலும் ஆக 40 தொகுதி களிலும் போட்டியிட்டிருந்தன.

தி.மு.க கூட்டணி

தி.மு.க கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் பாஜக எதிர்ப்பு என்ற மையப்புள்ளியில் இணைந்து செயல் பட்டனன. இந்த தேர்தலில் அ.தி. மு.க மற்றும் பா.ஜ.க எதிர் எதிரணி யாய் இருப்பதினால் இரண்டு கட்சி கூட்டணிகளையும் எதிர்த்து நிற்க வேண்டிய சூழல் திமுக கூட்டணிக்கு உருவாகியிருந்தது.

வடசென்னை, தென்சென்னை, திரு வண்ணாமலை, நீலகிரி, நாமக்கல், கோயம்புத்தூர், பொள்ளாச்சி ஆகிய 7 தொகுதிகளில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவை , தி.மு.க நேரடியாக எதிர் த்து நின்றது .காஞ்சிபுரம், ஸ்ரீபெரும் புதூர், வேலூர்,அரக்கோணம், ஆரணி, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், தேனி ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட 11 தொகுதிகளில் தி.மு.க அ.தி.மு.கவை நேருக்கு நேர் எதிர்த்து நின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் நாட்டில் தி.மு.க அரசு செயல்படுத்திய மகளிர் நலன் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள், பெருமளவு வாக்குகளை பெற்றுத்தரும் என்கிற கூடுதல் எதிர் பார்ப்பு திமுக கூட்டணி கட்சிகளிடம் இருந்து வருகிறது.

கலாநிதி வீராசாமி , தமிழச்சி தங்க பாண்டியன், தயாநிதி மாறன், ஆ. ராஜா, கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட தி.மு.க வினரும், ஜோதி மணி, மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் உள்ளிட்ட காங்கிரஸாரும் , சு. வெங்கடேசன் மார்க்சிஸ்ட் , கே சுப்பராயன் இந்திய கம்யூனிஸ்ட், திருமாவளவன் ரவிக்குமார் வி.சி.கே உள்ளிட்ட கூட்டணி கட்சியின் வேட்பா ளர்கள் பெரும்பாலும் ஏற்கனவே அவரவர் வெற்றி பெற்ற தொகுதிகளிலே யே இந்த முறையும் மீண்டும் போட்டியிட்டிருப்பதால் அவரவருக்கான வெற்றி வாய் ப்புகள் உறுதியாக இருக்கிறது என்பதும் தெரிய வருகிறது.

அ.தி.மு.க கூட்டணி

அ.தி.மு.க கூட்டணிக்காக கட்சிகள் காத்திருந்த காலம் மாறி, கூட்டணிக் காக மற்ற உதிரி கட்சிகளை எதிர்பார்த்திருந்த சூழல் ஏற்பட்டிருந்ததை வியப்போடு இந்த தேர்தலில் பார்க்க முடிந்தது. பாஜகவை போல ஒரு முழுமையான கூட்டணியை உருவாக்க முடியாத சறு க்கல் போக்கு அ.தி.மு.கவிற்கு அமை ந்துவிட்டது என்பதும் வெளிப்பட்டது.

தே.மு.தி.க, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ போன்ற சிறிய கட்சிகளுடன் மட்டுமே கூட்டமைப்பு நிலைக்கு அ.தி.மு.க தள்ளப்பட்டுள்ளது .மேலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி. மு.க வெற்றிபெற்றுவிடக்கூடாது என் பதில் காத்திரமாய் இருந்த ஓ. பன்னீர் செல்வம் அ.தி.மு.க (ப)என்று கட்சி யைப் பிரித்து, பா.ஜ.க கூட்டணியில் கைகோர்த்துக் கொண்டிருந்ததையும் அ.தி.மு.க கூட்டணி எதிர் கொள்ள வேண்டியிருந்தது.

மேனாள் தமிழக அ.தி.மு.க அமைச்ச ராக இருந்த ஜெயக்குமாரின் மகன் ஜே.ஜெயவர்த்தனனை தவிர இப் போதைய இந்த தேர்தலில் போட்டி யிட்ட அ.தி.மு.க மற்றும் புதிய தமிழ கத்தின் டாக்டர் கே.கிருஷ்ணசாமியை தவிர ஏனைய சிறிய கட்சி கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் புதியவர் கள் ;ஆனால் இரட்டை இலை சின்னத் தின் பிரபலம் மற்றும் வாக்கு பலம் அ.தி.மு.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு நம்பிக் கையை தந்திடுவதாக இருக்கிறது என்றே எதிர்பார்க்ப்படுகிறது.

பா.ஜ.க கூட்டணி

பாஜக , ஆளுங்கட்சியின் அதிகார ஏவல் பலம்,பணபலம் மற்றும் மிரட்டல் – பணியவைக்கும் முறைகளாலான காரியசித்தி பலம் உள்ளிட்ட ராட்சச பலம் பொருந்திய கட்சியாக, தமிழகத் திலும் பிறமாநிலங்களிலும் உருவாவ தற்கு தக்க வளர்ச்சியை பெற்று, கூட்டணி யை பலப்படுத்திக் கொண்டிருப்பதை யும் இந்த தேர்தலில் வெளிப்படையா கவே பார்க்க முடிந்தது.

அன்புமணியின் பா.ம.க, டி.டி.வி தினகரனின் அ.மு.மு.க , ஜி.கே. வாசனின் த.மா.கா, சரத்குமா ரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஓ. பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க (ப) உள்ளிட்ட உதிரி கட்சிகளோடு கூடிய கூட்டணியை பா.ஜ.க பலப்படுத்திக் கொண்டிருப்பதானது தேர்தல் வெற்றி க்கானதாக கணித்திட முடியாது.

பாஜகவின் ஒரே பலமாக திகழ்ந்துடும் மோடியின் தமிழக தேர்தல் பரப்புரை பயணங்கள் மக்கள் மத்தியில் அதிரு ப்தியைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. வெள்ள பாதிப்புகளை பார்க்க வராத, பாதிப்புகளுக்கு பேரிடர் நிவாரணத் தொகை இதுவரை ஏதும் வழங்கிடாத பிரதமராகத்தான் அவர் தமிழக மக்க ளால் எதிர்கொள்ளப்பட்டிருக்கிறார்.

தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க தலைமை யிலான கூட்டணி கட்சியினர் பலம் என்னவாக இருந்தபோதிலும், மக்கள் எந்த கூட்டணிக்கு வாக்களிக்களித்திருக்கிறார்கள் என்பதை தாமிழகத்தில் ஏப்ரல் 19ல் நடைபெற்ற ஜனநாயக தேர்தலும் ஜுன் 4ல் வெளியிடப்பட இருக்கிற அந்த தேர்தல் முடிவுகளுமே வெளிப்படுத்தியதாக இருக்கப் போகிறது என்பதுதான் நிதர்சன மான உண்மை நிலையாக இருக்கப் போகிறது.

இதழாளர் இசைக்கும்மணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here