வடசென்னை – வேளாண் மசோதாவை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் ;

0
261

வடசென்னை 28.09.2020 வேளாண் மசோதாவை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பாஜக நிறைவேற்றியுள்ள விவசாயிகள் தொழிலாளர்கள் விரோத அவசரச் சட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஆர் கே நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எஸ்.திரவியம், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சன் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களும் கலந்துகொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று மசோதாக்களில் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தான் ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதல்வர் விவசாயிகளின் வாழ்வை சீரழிக்கும் இந்த திட்டத்தை ரத்து செய்ய முன்வரவேண்டும் என்றும் அவசர சட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் வேளாண்மை சேவைகள் மீதான பாதுகாப்பு, அவசர சட்ட கொள்கைகளையும் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here