
திருவொற்றியூர் காலடிப்பேட்டை 12வது வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் ஆடி 5வது வாரத்தை முன்னிட்டு, நேற்று 16-8-2025 ஆயிரம் பேருக்கு சமபந்தி உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது_ நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு அவர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டு, மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார் இதில்12 வது மாமன்ற உறுப்பினர் தலைமை கழக வழக்கறிஞர் வீ.கவி.கணேசன் Mc, திருவொற்றியூர் கிழக்கு பகுதி துணை செயலாளர் எம்.வீ.குமார் Ex.Mc.., பொதுக்குழு உறுப்பினர் சாந்தி பக்தன், வட்ட கழக செயலாளர் கவீ.சதிஷ் குமார், மாவட்ட பிரதிநிதி பி.எஸ்.சைலஸ் Ex.Mc.., முன்னாள் மாமன்ற உறுப்பினர் வேலு. விழா பொறுப்பாளர் நம்ம விநாயகம் மற்றும் கழகத் தோழர்கள் ஏராளமான பொதுமக்கள் பக்த கோடிகள் விழா குழுவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.
















