திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்களின் 63 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா,மீஞ்சூர் நகர செயலாளர் சு. சந்திரசேகர் தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் உமாபதி முன்னிலை வகிக்க சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி. நீலமேகம் கலந்து கொண்டு பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார், இதில் நிர்வாகிகள் விநாயகமூர்த்தி,தேசிய திலகம், மனோ, நாகராஜ் வசந்த், ராஜா, பரணி, விக்னேஷ், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர் அதனைத் தொடர்ந்து மீஞ்சூர் அடுத்த பட்டம் மந்திரி பேருந்து நிலையத்தில் பொறுப்பாளர் மதன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளர் கூடியிருந்த பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் மேலும் முனைவர் தொல் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு அப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சார்பில் சுத்தம் செய்யப்பட்ட பேருந்து நிலையத்தை பார்வையிட்டும் நற்செயலை பாராட்டி நிர்வாகிகளை வாழ்த்தினார்.














