
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உங்களை தேடி உங்களின் ஊரில் உங்களின் வார்டில்.நகர்ப்புறம் 13 துறைகள் 43 சேவைகள் இவைகளின் திட்டங்களை உங்களின் இல்லங்களுக்கு சென்று செல்லும் உங்கள் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் முகாம் உங்களுடன் ஸ்டாலின் திட்டம், திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி 8வது வார்டு பெரியார் நகரில் , 14-8-2025 வியாழக்கிழமை காலை 9மணியளவில் தொடங்கப்பட்டது.இதில் ஏராளமான அப் பகுதி மக்கள் கலந்து கொண்டு அவர்களின் குறைகளான குடும்ப அட்டை, கலைஞர் மகளிர் உதவித்தொகை, பட்டா மாற்றம். ஆதார் சேவை என 46 அரசு சேவைகளக்கு மனு அளித்து 45 நாட்களில் தீர்வு காணும் முகாமில் கலந்துகொண்டு அந்தந்த துறைகளின் அதிகாரிகளிடம் மனுக்களை அளித்தனர். அங்கு வந்திருந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில் அனைவருக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம் திரு.எஸ்.சுதர்சனம் MLA, திருவொற்றியூர்றக் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.சங்கர் MLA, திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் திரு.தி.மு.தனியரசு,மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் தி.நகர் எஸ்.மோகன்,8வது வார்டு மாமன்ற உறுப்பினர் டி.சி.வி.ராஜகுமாரி Mc, மாநகராட்சி மண்டல அலுவலர் திரு.பாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டனர்.இதில் வடகிழக்கு மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன், கிழக்கு பகுதி அவைத்தலைவர் ஆர்.சி.ஆசைதம்பி, துணை செயலாளர் எம்.வீ.குமார், மேற்கு பகுதி துணை செயலாளர் குறளரசன், 8வது வார்டு வட்ட கழக செயலாளர் டி.சி.வி.மணிகண்டன், 7வது வார்டு வட்ட கழக செயலாளர் த.கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதிகள் ஓய்.நந்திவர்மன், டி.டி.எம்.பாபு, பி.எஸ்.சைலஸ், சந்தாண கிருஷ்ணன், சென்னை வடகிழக்கு மாவட்ட நெசளாளர் அணி துணை அமைப்பாளர் அருளாணந்தம், மாவட்டத் தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ரங்கநாதன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சுகந்தா முனுசாமி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பரசுராமன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தினேஷ் வேலன் மற்றும்கழக தோழர்கள், அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்_














