சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே உத்திரபிரதேச மாநிலத்தில் தலித் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து நாவினை அறுத்து படுகொலை செய்ததை கண்டித்து வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்யாகிரக அறவழி அமர்வு என்ற பெயரில் அறவழி போராட்டம் நடைபெற்றது.
வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரவியம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பலராமன், விஜய் வசந்த் ஆகிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர் கூறியதாவது,
பாஜக அரசின் யோகி ஆதித்யா ஆட்சியில் பெண் வீட்டாருக்கு எதிரா என்னென்ன செய்ய முடிகிறதோ அதை செய்து வருகிறார்கள்.
ராகுல் காந்தி தலைவர் இல்லை என கூறுபவர்கள் அவர்களின் ஒவ்வொரு அடிக்கும் அஞ்சுகின்றனர். இந்த சம்பவத்தில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பொய் பிரச்சாரம் செய்ய தேவையில்லை.
இல கணேசன் வயதானவர் அவருக்கு பதில் அளித்தால் அவமரியாதை செய்வதுபோல ஆகிவிடும்.
கல்வி கொள்கையில் மொழியை கற்று கொள்வதில் எந்த தவறும் இல்லை. அதனால் மட்டுமே கல்வி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தேன். இதில் மொழித்திணிப்பு என எதும் இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாக மட்டுமே கூறினேன். இதற்காக ராகுல் காந்தியிடம் மன்னிப்பும் கோரிவிட்டேன்.
நடிகர் தற்கொலைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஒரு பெண் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு கொடுக்கப்படவில்லை. சம்பவத்தை திசை திருப்புவதற்காக எது வேணாலும் செய்யப்படும். சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகைக்கு அளிக்கும் பாதுகாப்பு பெண்ணின் குடும்பத்தாருக்கு கொடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.













