கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது விபத்தில் 2 பேர் பலி; 9பேர் காயம்;

0
306

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் பாலையா. இவர் அங்கு பழைய இரும்பு பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாலையா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் நேற்றிரவு சென்னையில் இருந்து காரில் புறப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் செல்லும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோரமுள்ள தடுப்பு கம்பியில் மோதியது. இதில் காரில் இருந்த ராமன்(வயது 40), மற்றும் அவரது மகன் ரக்‌ஷன் (2) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாலையா மற்றும் அவரது குடும்பத்தினர் 9பேர் காயமடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 9 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராமன், ரக்‌ஷன் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. டிரைவர் தூங்கியதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here