சென்னை பட்டாபிராம், தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது;

0
358

சென்னை பட்டாபிராம், சோழன் நகரில் கடந்த 19-ம் தேதி அதிகாலையில் வெங்கட்ராமன் என்பவரது எண்ணெய் கடையை உடைத்து 10,000 ரூபாயை மர்மநபர்கள் திருடி சென்றனர். பின்னர் அதே நபர்கள் அடுத்த சிலமணி நேரத்தில், சென்னை, திருப்பதி நெடுஞ்சாலையில் பட்டாபிராம் காவல் நிலையம் எதிரில் பணி முடிந்து, வீட்டிற்கு நடந்து சென்ற தனியார் நிறுவன ஊழியர் ஆரோன் என்பவரின் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு, அவரது செல்போனை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், திருவள்ளூர், திருவாலங்காடு காட்டு பகுதியில் பதுங்கியிருந்த வழிப்பறி கொள்ளையர்களான திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த மதன்குமார், சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்காக தனி வாட்ஸ்அப் குழுவை உருவாக்கிய போலீசார், இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களுக்கு கொள்ளையர்களின் புகைப்படங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் உள்ளிட்டவைகளை பகிர்ந்து தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here